#வாதம்விவாதம்: ''கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்''

  • 15 மார்ச் 2018
வாதம்விவாதம் படத்தின் காப்புரிமை Getty Images

தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என கனடா நாட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர் . இந்நிலையில்,'' இந்தியாவில் அரசு மருத்துவர்கள் இப்படி ஊதியத்தை மறுப்பது சாத்தியமா?,இந்திய மருத்துவர்களுடன் கனடா மருத்துவர்களை ஒப்பிடுவது பொருத்தமற்றதா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே..

''கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளை தங்கள் குடிமக்களுக்குச் சமூகநீதி, பொது நலன் அடிப்படையில் பெரும் சேவைத் துறையின் கீழ் வழங்கும் கனடா நாட்டு மக்களின் வாழ்க்கை முறையையும், தங்களது வருவாயின் பெரும்பகுதியை கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக செலவு செய்யும் இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிடுவது கனவிலும் சாத்தியமற்றது. இது மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்தவருக்கும் பொருந்தும்'' என்கிறார் சக்தி சரவணன்.

``கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அரசன் எவ்வழியோ, அவ்வழிதான் மக்களும். பேசாமல் கனடாவுக்கு குடிபெயர்ந்து விடலாமா? என்று தோன்றுகிறது.`` என பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

``மருத்துவர்களின் ஊதியம் என்பது இந்தியாவில் அதிகமே. ஆனால் அவர்கள் ஊதிய உயர்வு வேண்டாம் என்று சொல்ல சாத்தியமில்லை`` என்பது நிசார் அகமதின் கருத்து.

`` இது சமூகத்தை பொருத்தது. இரு நாடுகளையும் ஒப்பீடு செய்ய முடியாது'' என்கிறார் வேலாயுதம்.

''ஒன்று முற்றாக வளர்ச்சி அடைந்த சமூகம். மற்றது வளர்ந்து வ௫ம் சமூகம்'' என கூறுகிறார் மஹா நடராசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்