அமெரிக்காவில் பாலம் இடிந்து 4பேர் பலி; 10 பேர் காயம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இடிபாடிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.

எட்டு வழி சாலையின் மீது பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு வாகனங்கள் நொறுங்கியது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை.

வியாழன் இரவு வரை 4 பேர் பலியாகியுள்ளதாக மியாமியின் தீயனைப்பு அதிகாரி தெரிவித்தார்.

மீட்பு பணிகளுக்கு அதிக நேரம் பிடிக்கும் எனவும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் டவ்னி தெரிவித்தார்.

குறைந்தது 10 பேர் உள்ளூர் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும அதில் இருவரின் நிலை "மோசமாக" உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

950 டன் எடை மற்றும் 53மீ நீலமான அந்த பாலம் சனிக்கிழமையன்று வெறும் ஆறு மணி நேரத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

நொஞ்சை உலுக்கும் இந்த சமபவத்தின் மீட்பு பணிகளை தான் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பெரும் சத்தத்தை கேட்டோம் அது தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் ஏதோ கிழே விழுந்துவிட்டது என்று நினைத்தோம் பிறகுதான் பாலம் இடிந்தது தெரிந்தது. தற்போது மிகவும் அச்சமாக உள்ளது" என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சிபிசி நியூஸிடம் தெரிவித்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்