உலகப்பார்வை: தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

புதிய சட்டத்திற்கு சீனா எதிர்ப்பு

தைவான் அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். தைவானை துரோகியாக கருதும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்கா "ஒரே சீனா" என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும்; தைவான் உடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

படத்தின் காப்புரிமை AFP Contributor

சிரியா மக்கள் வெளியேற்றம்

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வசிக்கும் மக்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் தற்காலிக குடியிருப்புகளுக்கு டஜன்கணக்கான பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது மிகப்பெரிய ஆறுதலைத் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த இராக் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த இராக் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஃபீபா நீக்கியது. 1990ஆம் ஆண்டு குவைத் மீது சதாம் ஹுசைன் போர் தொடுத்த சமயத்தில் இந்த்த்தடை விதிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Alexander Hassenstein

அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் தலைவர் ஜான் பெய்லி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்

ஆஸ்கார் விருதுகளை மேற்பார்வையிடும் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ்' தலைவர் ஜான் பெய்லி, மூன்று பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாக பெயர் வெளியிடாமல் கூறப்படும் ஆதாரங்களை மேற்கோள் காட்டி `ஹாலிவுட் டிரேட் பப்ளிகேஷன்ஸ்` கூறுகிறது. இது தொடர்பாக பெய்லி இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்