கிரேக்கம்: படகு கவிழ்ந்து 15 குடியேறிகள் உயிரிழப்பு

கிரேக்கம் படத்தின் காப்புரிமை EPA

துருக்கியில் இருந்து கடந்து செல்ல முயன்றபோது, குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

படகில் சுமார் 20 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

விபத்தில் சிக்கிய மற்றவர்களை துருக்கி கடற்கரையோரம் அருகே உள்ள, அகதொனிசி தீவில் கடலோரக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வைத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களை விட, சனிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்தில் கிரேக்க நாட்டுக்கு தப்பித்து செல்லும் குடியேறிகளில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் உடன்படிக்கை செய்திருந்ததை அடுத்து, கிரேக்கத்துக்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் தரவுகள்படி, இந்த ஆண்டு இதுவரை 4000 குடியேறிகள் கடல் வழியாக கிரேக்க தீவுகளுக்கு சென்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: