உலக பார்வை: சிரியாவுக்குள் நுழைய ராணுவம் தயார் என்கிறது துருக்கி

  • 18 மார்ச் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு: விசாரணைக் குழுவை கலைக்கக் கோரும் டிரம்ப்பின் வழக்குரைஞர்

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவை கலைத்து விட விரும்புகிறார் அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ஜான் டவ்ட். முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குனர், ஜேம்ஸ் கோமி உருவாக்கிய விசாரணைக் குழு ராபர்ட் முல்லரால் அரசியல் ரீதியாக "சிதைந்துவிட்டது" என்று ஜான் டவ்ட் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அஃபிரினுக்குள் நுழைய ராணுவம் தயார்

குர்த் இன ஒய்.பி.ஜி போராளிகளுடன் இரண்டு மாதமாக தொடர்ந்து சண்டையிட்டு வரும் துருக்கி துருப்புக்கள், தற்போது சிரியாவின் வட பகுதி நகரமான அஃபிரினுக்குள் நுழையத் தயார் என்று அந்நாட்டு அதிபர் எர்துவான் கூறுகிறார். துருக்கிய படைகளாலும், சிரியாவின் கிளர்ச்சி கூட்டாளிகளாலும் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் அஃப்ரினில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறிவிட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐந்து மீனவர்கள் கொலை

வடகிழக்கு நைஜீரியாவில் தொலைதூர கிராமம் ஒன்றில் உள்ள ஐந்து மீனவர்களை போகோ ஹராம் இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜிகாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளி மாணவிகளை கடத்தியவர்களை தேடும் பணியில் ராணுவத்திற்கு உதவியதற்காக அவர்கள் கொல்லப்பட்டதாக மீனவர் தொழிற்சங்க தலைவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

அஹ்மதிநெஜாட்: நீதித்துறையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை

முன்னாள் கடும்போக்கு அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் நெருங்கிய கூட்டாளி எஸ்ஃபன்தியர் மஷாயை இரான் போலிஸ் கைது செய்துள்ளது. கைது செய்வதற்கான எந்த காரணமும் கூறப்படவில்லை. நாட்டில் நீதித்துறையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை இந்த கைது நடவடிக்கை உணர்த்துவதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: