ரஷ்யா: புதின் மீண்டும் வெல்வார் - கருத்து கணிப்பு

புடின் படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்யா தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அடுத்த அதிபராக புதின் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு விளாடிமிர் புதின் அதிபராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதினுக்கு 73.9 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2012 ஆம் ஆண்டு இவர் வெற்றி பெற்றதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெறுவார் என பரவலாக கணிக்கப்பட்டது.

பிரதான எதிர்கட்சி தலைவரான அலெக்செய் நவல்னி, பெரிதும் பின்தங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்