உலகப் பார்வை: ''கேட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்தை விட, சுயாட்சியை பெறலாம்''

  • 19 மார்ச் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

"சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை பெறலாம்"

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்பெயினிடம் இருந்து முழு சுதந்திரத்தை பெறுவதை விட, சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை கேட்டலோனியா ஏற்றுக்கொள்ளலாம் என பதவி நீக்கப்பட்ட கேட்டலன் பிரிவினைத் தலைவர் பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

ரஷ்யா பொறுப்பு அல்ல

படத்தின் காப்புரிமை EPA/ YULIA SKRIPAL/FACEBOOK

பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்த விவகாரத்தில் ரஷ்யா பொறுப்பு அல்ல என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பிரிட்டனின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ

படத்தின் காப்புரிமை NSW RURAL FIRE SERVICE

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், 70 க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளதாகத் தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர். இத்தியினால் நூற்றுக்கனகானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

சிரியா: அடுத்த பகுதிக்கு செல்லும் ராணுவம்

படத்தின் காப்புரிமை Reuters

சிரிய குர்துக்களின் நகரமான ஆஃபிரின் நகரத்தைத் துருக்கி ஆதரவிலான படைகள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், சிரியாவில் குர்துக்கள் பலமாக இருக்கும் மற்றொரு பகுதிக்கு தங்கள் ராணுவம் அனுப்பப்படலாம் என துருக்கி கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: