ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை விமர்சித்த டிரம்புக்கு கடும் எச்சரிக்கை

டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும், ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு கவுன்சிலின் விசாரணையில் தலையிட்ட டிரம்பை குடியரசு கட்சியினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்த முல்லர் கமிட்டியின் விசாரணையை டிரம்ப் கடுமையாக விமர்சித்ததையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில், இது நேர்மையற்ற விசாரணை என்று கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்து இருந்தார்.

விசாரணைக் குழு கடுமையான ஜனநாயகவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த ட்வீட்டை பல குடியரசு கட்சியினர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

எஃப்.பி.ஐ -ன் முன்னாள் தலைவரும், இப்போது இந்த விசாரணையை மேற்கொண்டு வருபவருமான ராபர்ட் முல்லர் குடியரசு கட்சியின் ஆதரவாளர்தான்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ராபர்ட் முல்லர்

"எந்த தலையீடும் இல்லாமல் முல்லர் தனது விசாரணையை நடத்தி முடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்" என குடியரசு கட்சியின் சபையினரான லின்ட்சி க்ரஹாம் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்தினை பல குடியரசு கட்சியினர் பகிர்ந்துள்ளனர்.

முல்லரை விசாரணைக் குழுவில் இருந்து நீக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்றும் அவர் டிரம்பை எச்சரித்துள்ளார்.

"அப்படி ஏதேனும் டிரம்ப் செய்தால், அது அவரது ஆட்சியின் அழிவுக்கு ஆரம்பமாகிவிடும். ஏனெனில் நாம் சட்டத்தை மதித்து பின்பற்றும் ஒரு தேசம்" என்றும் க்ரஹாம் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Inpho

விசாரணைக் குழு குறித்த அதிபர் டிரம்பின் கருத்துகள், முல்லரை நீக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவது போல் தெரிகிறது என குடியரசு கட்சியின் ஜெஃப் ஃபளேக் தெரிவித்துள்ளார்.

"விசாரணை குறித்து வெள்ளை மாளிகை ஏன் கடுமையாக நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை. விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: