'ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார்' : அதிபர் தேர்தலில் வென்ற புதின்

  • 19 மார்ச் 2018

ரஷ்யாவின் அதிபராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புதின், பிற நாடுகளுடன் "ஆக்கபூர்வமான" பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Pool

"ஆனால் அது நிச்சயமாக எங்களை மட்டுமே சார்ந்ததில்லை" என்று அவர் கூறினார். "இது காதலைப்போன்றது, இருதரப்புக்கும் ஆர்வம் இருக்கவேண்டும் இல்லையென்ரால் காதலிப்பது சாத்தியப்படாது" என்று புதின் தெரிவித்தார்.

ஆயுதப்போட்டி எதுவும் இல்லை என்று கூறிய அதிபர், பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதாக உறுதியளித்தார்.

இந்த அதிபர் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிட தடை செய்யப்பட்ட நிலையில், புதின் 76 சதவிகித வாக்குகளை பெற்றதாக அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Pool

மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை என்றாலும், "வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக" சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.

கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முக்கிய எதிர்கட்சி தலைவரான அலக்சே நவால்னி தோல்வியை சந்தித்துள்ளார்.

தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், "கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்" என தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 64 சதவீத வாக்குகளை காட்டிலும் இந்த முறை அதிக வாக்குகளை பெற்றுள்ளார் புதின்.

புதினுக்கு அடுத்தப்படியாக பெரும் பணக்காரரும், கம்யூனிஸ்டுமான பாவல் குருடினின் சுமார் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

Image caption ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவுகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், புதின் 60சதவீத வாக்குகளை பெற்றிருந்ததாக தெரியவந்தது.

புதினின் பிரசாரம், அவருக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கும் வகையில் கூடுதல் வாக்குகளை பெற்றுதரும் என நம்பப்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேசெனியா சோப்சக், 2 சதீவீதத்திற்கும் குறைவான வாக்குகளும், மூத்த தேசியவாதி விளாடிமிர் சிரினோஃப்ஸிகி 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளும் பெற்றிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்