எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்

பழங்குடியினர்/பட்டியல் பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த சட்டத்தில் தொடக்க விசாரணை, வழக்கு தொடுத்தவுடன் கைது நடவடிக்கை நீக்கம் போன்றவற்றை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் எ.கே.கோயல் மற்றும் யு.யு. லலித் நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள ஆணையில், 7 நாட்களுக்குள் முடிக்கப்படும் தொடக்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பகைமைகளை தீர்த்து கொள்வதற்கு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த சட்டத்தை விமர்சிப்போர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பல தலைமுறைகளாக இருந்து வரும் தலித்துகளுக்கு எதிரான சாதி தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான பாதுகாப்புதான் இந்த சட்டம் என்று இந்த சட்டத்தை ஆதரிப்போர் கூறுகின்றனர்.

இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கியமான கருத்துகள்

படத்தின் காப்புரிமை iStock
Image caption கோப்புப்படம்
 1. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு தொடக்க விசாரணை நடத்தப்பட்டு 7 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
 2. தொடக்க விசாரண நடத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், கைது கட்டாயமல்ல.
 3. குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவன்/அவளின் நியமன நிர்வாகத்தின் அனுமதியின் பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.
 4. அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவன்/அவள் மூத்த காவல்துறை கண்காணிப்பாளின் அனுமதியோடு மட்டுமே கைது செய்யப்படலாம்.
 5. கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று இந்த சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், இந்திய உச்ச நீதிமன்றம், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.
 6. வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறை சாதியை வளர்ப்பதற்கு பங்காற்றுவதாக அமைந்துவிடக்கூடாது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கும் எதிர்மறையாக பாதிப்பு ஏற்படும். இது பற்றிய கவலைகளை எழுப்பவது அவசியமாகும்.... 14-16 சட்டப்பிரிவு உட்பட அரசியலமைப்பு சட்டம் அதன் முன்னுரையில் சாதி அல்லது மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 7. பிறரை மிரட்டவோ அல்லது தனிப்பட்ட விதத்தில் பழிவாங்கவோ ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கம் இந்த சட்டத்தில் ஒருபோதும் இல்லை என்று உச்ச நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதை தடுப்பதும் இந்த சட்டத்தின் நோக்கமல்ல. எனவே, முழு சான்றுகள் இல்லாத நேர்மையான மற்றும் பொருத்தமற்ற வழக்குகளுக்கு கைதுக்கு முன் பிணை வழங்குவதில் கட்டுப்பாடு இல்லாவிட்டால், குற்றம் அறியாத குடிமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 8. உரிமைகள் மீறல் கண்டறியப்பட்டால், செயலற்ற அல்லது எதிர்மறையான பங்காற்றுதல் மற்றும் வழிப்போக்கர் அல்லது பார்வையாளர் போல நீதிமன்றம் இருந்துவிடக் கூடாது என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநீதி மற்றும் அடிப்படை உரிமைகள் மீறலை சோதனை செய்வதற்கான புதிய கருவிகள் மற்றும் வியூகங்களை வகுப்பது அவசியமாகும் என்று அது மேலும் தெரிவித்திருக்கிறது.
 9. தேசிய குற்றப் பதிவுகள் துறையின் 2015ம் ஆண்டு தரவுகளை மேற்கோள்காட்டி, சுமார் 15-16 சதவீத வழக்குகள் 2015ம் ஆண்டு விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிக்கப்பட்டுள்ளதை இந்த ஆணை தெரிவித்துள்ளது. 75 சதவீதத்திற்கு மேலான வழக்குகள் விடுதலை/திரும்ப பெறுதல் அல்லது வழக்குகளை பேசி முடிப்பதில் நிறைவு பெற்றுள்ளன. "இந்த வழக்குகளில் விசாரணைகள் உயரிய நிலைகளில் நடத்தப்பட்டுள்ளதால், உயர் தர விசாரணையாகவே எதிர்பார்க்கப்படுகிறது" என்று விடுதலையில் முடிவு பெறும் விசாரணைகளின் தரத்தை பற்றிய கேள்விக்கு பிபிசிக்கு பதிலளிக்கையில் இது பற்றி நீதி ஆலோசனை வழங்கும் அம்ரென்திரா ஷாரான் தெரிவித்தார்.
 10. தவறான வழக்குகளுக்கு எதிரான தண்டனை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, இத்தகைய கேள்வி இந்த சட்டத்தின் அம்சங்களுக்கு எதிரானது என்பதுதான் பதிலாக அமையும் என்று இந்த ஆணை தெரிவித்திருக்கிறது.
 11. டாக்டர் சுபாஷ் காசிநாத்துக்கு எதிராக மஹாராஸ்டிராவும், அன்ரும் தொடுத்த வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூத்த அதிகாரிகளால் பட்டியல் பிரிவை சேர்ந்த தொழிலாளரின் ஆண்டு ரகசிய அறிக்கையில் எதிர்மறையாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. குற்றுஞ்சாட்டப்பட்டிருப்போர் பட்டியல் பிரிவை சேராதவர்கள். இந்த அதிகாரிகளை நியமித்தவரிடம் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு புலனாய்வு அதிகாரி அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்