தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்

  • 22 மார்ச் 2018
தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க் படத்தின் காப்புரிமை Justin Sullivan

ஃபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது" என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க்.

இது குறித்து தான் "மிகவும் வருந்துவதாகவும்" "நேர்மையற்ற செயலிகளுக்கு" எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சின்என் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார் மார்க். இது சரிதான என நாடாளுமன்றத்தின் முன் சோதனை நடத்தவும் தான் "மகிழ்ச்சியுடன்" தயாராக இருப்பதாதவும் தெரிவித்தார்.

செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது "மிக கடுமையாக்கப்படும்" எனவும் அவர் உறுதியளித்தார்.

"உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது; எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாங்கள் இழப்போம்" என்றார் மார்க் சக்கர்பர்க்.

"ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.

மார்க் சக்கர்பர்கின் உறுதி:

தற்போதைய மற்றும் இதற்கு முந்தைய காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஃபேஸ்புக் கூறியவை:

பெருவாரியான தகவல்களை வைத்திருக்கும் அனைத்து ஃபேஸ்புக் செயலிகள் குறித்து விசாரிப்பது.

சந்தேகத்திற்கு விதமான செயலிகளின் பணபரிவர்தனைகளை முழுமையாக பரிசோதிப்பது.

முழுமையான பரிசோதனைக்கு ஒப்பு கொள்ளாத செயலிகளை தடை செய்வது.

தனிநபர் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களை தடை செய்வது மேலும் அந்த செயலியால் பாதிக்கப்பட்டோர்களிடம் அது குறித்து கூறுவது.

எதிர்காலத்தில் என்ன செய்யும் ஃபேஸ்புக்?

ஒரு செயலியை பயனாளிகள் மூன்று மாதத்திற்கு மேலும் பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் பயனாளிகளின் தகவல்கள் அந்த செயலியிலிருந்து நீக்கப்படும்.

ஒரு செயலிக்குள் செல்லும்போது பயனாளிகள் தரும் தகவல்களை குறைப்பது அதாவது வெறும் பெயர், புகைப்படம், மின்னஞ்சல் ஆகியவற்றை மட்டும் வழங்குவது.

செயலிகளை உருவாக்குபவர்கள், தனிநபர் தகவல்களையோ பதிவுகளையோ பெற கையெழுத்து ஒப்புதல் பெற வேண்டும்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்