சீன பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்கா முடிவு

  • 23 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை Reuters

சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 60பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. எனவே அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டுக்கு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

சீன பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் நியாயமற்ற போட்டியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, பல வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையால் மாற்றத்தை கொண்டு வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கை எடுக்க, தாங்களும் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான எந்தவித வர்த்தக போரிலும் "இறுதிவரை போராட தயார்" எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

50பில்லியன் டாலரிலிருந்து 60 பில்லியன் டாலராக வரி உயர்த்தப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பல்வேறு பொருட்களுக்கு மூன்று பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்கப் போவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் பழங்கள், ஒயின் மற்றும் ஸ்டீல் பைப்புகள் ஆகியவை அடங்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்