பிரான்ஸ்: நீதி விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் அதிபர் சர்கோசிக்கு உத்தரவு

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக நீதி விசாரணை எதிர்கொள்ள வேண்டுமென பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசிக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

தன்னுடைய தேர்தல் பரப்புரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சட்டத்திற்கு புறம்பான நிதி பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயன்றதாக 2014ம் ஆண்டு நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை மையமாக வைத்து சர்கோசி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கில்பர்ட் மற்றும் சர்கோசியின் வழக்கறிஞரும் விசாரணக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு பிரன்ஸ் அதிபர் தேர்தலில் லிபியாவின் மறைந்த தலைவர் முகமது கடாபியிடம் இருந்து பரப்புரை நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரப்புரையில் அதிக தொகை செலவு செய்ததாக 2012ம் ஆண்டு விசாரிக்கப்பட்டார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சர்கோசி மறுத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: