நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்

படத்தின் காப்புரிமை WALTER DHALDHLA

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான பிரச்சாகரான 81 வயதாகும் வின்னி மண்டேலா இறந்துவிட்டதாக அவரது தனி உதவியாளர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி இவர்.

கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது அவருடன் வின்னி மண்டேலா கைகோர்த்து நடந்த புகைப்படம் அப்போது இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தது.

எனினும், அதன்பிறகு அவரது புகழ் சட்டபூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும் மங்கத் தொடங்கியது.

வின்னி மண்டேலாவின் இறப்பு குறித்த ஒரு அறிக்கையை அவரது குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: