’வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பிரிட்டன் கடற்கரையை அடையலாம்’

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

வடகொரிய ஏவுகணை ஒருசில மாதங்களில் பிரிட்டன் கடற்கரையை அடையலாம்

பட மூலாதாரம், Reuters

ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் பிரிட்டன் கடற்கரையை அடையும் அளவிற்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரிய ஏவும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்தி வரும் அளவுக்கு திறன் படைத்ததாக உருவாக்க முடியுமா என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என பொது பாதுகாப்பு தேர்வுக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

இத்தகைய தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் வட கொரிய அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சிரியா போர்: அமெரிக்க ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டாம்

பட மூலாதாரம், AFP

சிரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டாம் என்று அதிபர் டிரம்பிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறும் என்று கடந்த வாரம் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பான ஐ.எஸ், மீண்டும் அங்கு எழுச்சி பெறும் அபாயம் இருப்பதாக அலோசகர்கள் டிரம்பிடம் கூறியுள்ளனர்.

சிரியாவில், அமெரிக்க ராணுவப்பணி விரைவில் முடிவுக்கு வரும் என கடந்த புதன்கிழமையன்று வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.

அமெரிக்காவின் சுமார் 2000 ராணுவ வீரர்கள், சிரியிவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ளனர். குர்து மற்றும் அரபு போராளிகளின் கூட்டணியான சிரிய ஜனநாயக படைகளுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுகின்றனர்.

அமெரிக்க ஹீரோவான மாரடின் லூதர் கிங்கின் நினைவு தினம்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளை மேலாதிக்கவாதி ஒருவரால் 50 வருடங்களுக்கு முன் சுட்டுக் கொள்ளப்பட்ட சிவில் உரிமைகளின் தலைவர் மார்டின் லூதர் கிங்கின் நினைவு தினத்தை (ஏப்ரல் 4) அடையாளப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மணி அடிக்கப்பட்டது.

மொத்தம் 39 முறை அடிக்கப்பட்ட மணி, அவர் வாழ்ந்த ஒவ்வொரு ஆண்டையும் குறித்தது. மார்டின் லூதர் கொலை செய்யப்பட்ட மெஃபிஸ்சில் உள்ள மோட்டலில்தான் முக்கிய நிகழ்வு நடைபெற்றது.

மார்டினை பாராட்டி, அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமாவும் வீடியோ பதிவுகளை வெளியிட்டனர்.

ஃபேஸ்புக்: 87 மில்லியன் மக்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா, 87 மில்லியன் மக்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.

அதில் 1.1 மில்லியன் பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய கிறிட்டோஃபவர் வேலி, 50 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவித்தது.

"நாங்கள் நிறைய செய்திருக்கலாம், நாங்கள் முன்னேறி செல்வோம்" என மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தகவல்களை வழங்கும் தளத்தை ஃபேஸ்புக் தருகிறது என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் பொறுப்பு என்றும் முன்னர் கருதியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மார்க் சக்கர்பர்க்,அத்தகைய குறுகிய எண்ணம், தவறான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: