உலகப் பார்வை: சரணடைய மறுக்கும் முன்னாள் அதிபர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை Getty / EPA/ AFP

முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடையவும் கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மறுத்துவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் போலீஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு தண்டனை அளிக்கப்பட்டதாக கூறுகிறார் லுலா.

தொடரும் தாக்குதல்

படத்தின் காப்புரிமை AFP

சிரியாவில் அரசு படை நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் வசம் இறுதியாக உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் ஒரு நகரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். கிழக்கு கூட்டாவின் டூமா பகுதியை நிர்வகிக்கும் கிளர்ச்சி படையான ஜெய்ஷ் அல் இஸ்லாம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறுகிறது சிரியா அரசு ஊடகம் .

காசா - இஸ்ரேல் எல்லையில் பதற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

காசா - இஸ்ரேல் எல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது பாலத்தீனிய சுகாதாரத் துறை அமைச்சகம். அத்துமீறி எல்லையை தாண்டி மக்கள் உள்ளே வர முயற்சித்த போது, இத்தாக்குதல் நடந்ததாக கூறுகிறது இஸ்ரேலிய ராணுவம். இப்போது இஸ்ரேலில் உள்ள அகதிகளின் பூர்வீக நிலத்திற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தங்கள் கோரிக்கை என்கிறனர் பாலத்தீனியர்கள். ஆனால், காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுப்பதற்காகவே இந்த பேரணிகளை நடத்துவதாக கூறுகிறது இஸ்ரேல்.

விரிவாக படிக்க: இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 8 பாலத்தீனர்கள் பலி, 250 பேர் காயம்

ரஷ்ய நிறுவனங்களுக்கு தடை

படத்தின் காப்புரிமை Getty Images

`உலகம் முழுவதும் தீய செயல்களில் ஈடுபட்டார்கள்` என்று குற்றம் சுமத்தி, ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஏழு தொழிலதிபர்கள் மற்றும் 17 மூத்த அரசு அதிகாரிகளுக்கு தடை விதித்து உள்ளது அமெரிக்கா. இந்த தொழிலதிபர்களால் நிர்வகிக்கப்படும் 12 நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றனர் அமெரிக்க உயர் அதிகாரிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: