ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை DANIEL KOLLENBERG

இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடா: ஹாக்கி அணிப் பேருந்தும் லாரியும் மோதி 14 பேர் பலி

அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் சரக்கு வாகனம் ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PAUL FEGMANN

கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்