மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்?

மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்?

மெக்சிகோ அதிபர் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மேலதிக அளவிலான விகிதத்தில் நடந்து வரும் படுகொலை சம்பவங்களில், அமைப்புசார் குற்றவாளிகளுக்கும், போதை பொருள் கும்பல்களும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. மெக்சிகோவில் கடந்த ஆண்டு சுமார் முப்பதாயிரம் கொலைகள் நடந்தன. இந்த ஆண்டு தொடக்கம் முதல் அங்கு சராசரியாக தினமும் 71 கொலைகள் நடக்கின்றன. இதையடுத்து, அங்கு வன்முறையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலோர மாகாணங்களான அகபுல்கோ, குரேரொவுக்கு நேரில் சென்றது பிபிசி.