சிரியா நெருக்கடி: குடையும் கேள்விகளுக்கான பதில்கள்

தாக்குதலுக்குள்ளான 3 குழந்தைகள் படத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவின் டூமா நகரில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலை தொடர்ந்து, ரஷ்யா, சிரியா மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் சிக்லான நிலைமை தோன்றியுள்ளது.

சிரியாவில் உருவாகும் "போர் ஆபத்து" பற்றி ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா அரசு இந்த ரசாயன தாக்குதலை நடத்தியதற்கான 'சான்று' தன்னிடம் உள்ளதாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இத்தகையதொரு சூழ்நிலைக்கு சர்வதேச சமூகம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்றும், அடுத்து என்ன நடக்கும் என்றும் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

வாசகர்களால் அனுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பிபிசியின் உலக விவகார செய்தியாளர் பால் ஆடம்ஸ் பதிலளித்துள்ளார்.

கேள்வி: இந்த தாக்குதலின் நோக்கம் என்ன? டூமா நகரம் எல்லா பக்கங்களிலும் சிரியா படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களை சில நாட்களில் தோற்கடிக்க முடியும் நிலைமை தோன்றியுள்ளது. எனவே, எதற்காக ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்த வேண்டும்?

பதில்: சிரியாவின் கிழக்கு கூட்டா மீது பல மாதங்களாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களின் கடைசி வலுவிடமாக இருக்கின்ற டூமா நகரம் வீழ்வது நிச்சயம் என்பது தெளிவாகியுள்ளது.

ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு முன்னரே ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற ஒப்பந்தம் மூலம் கிளர்ச்சியாளர்களும், அவர்களின் குடும்பத்தாரும் வெளியேறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இந்தப் பின்னணியில், ரசாயன தாக்குதல் தேவையற்ற ஒன்றாகவே தெரிகிறது. சிரியா ஆட்சியாளரின் பார்வையில் இது எதிர்வினைகளை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மேற்குலக நாடுகளின் பதில் நடவடிக்கை மிகவும் அரிதாகவே வெளிப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்து பற்றி சிரியா படையினர் திருப்தி அடைந்து விட்டனரா?

எங்கே, எப்படி இந்த ரசாயன தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் மிகவும் திறமை வாய்ந்த்தாக அசாத் ஆட்சி உருவாகிவிட்டது என்று மேற்குல ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டூமாவை தாக்குவதற்கு எடுத்த முடிவு ஒரு தோல்வியா? நமக்கு தெரியவில்லை.

சிரியாவின் தலைவர் பஷார் அல்-அசாத் மீது தாக்குதல் நடத்த செய்ய கிளர்ச்சியாளர்களின் கடைசி சோகமான முயற்சியாக இந்த தாக்குதல் இருக்கும் சாத்தியம் உள்ளதா?

படத்தின் காப்புரிமை ஏ.பி.ஸ்ரீதர்

இதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி தேன்றவில்லை. இப்படிப்பட்டதொரு தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்த இருப்பதாக "நம்பகரமான" தகவல் உள்ளதாக ரஷ்யாவின் முப்படை தளபதிகளின் தலைவர் வலாரி கெராசிமோஃப் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தார்.

எப்படியானாலும், டூமா நிச்சயம் அரசப் படைகளின் கைகளில் வீழந்துவிடும் நிலையில் இருக்கின்றபோது, இத்தகைய ரசாயன தாக்குதலை சிரியா அரசு ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வி மக்களின் மனதில் உள்ளது.

கிழக்கு கூட்டா தோல்வியடைய இருக்கின்ற கடைசி நிலை வரை கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

சிரியாவின் கிழக்கு கூட்டாவை அரசு கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துவதற்கு எள்ளளவு விருப்பத்தை கூட மேற்குலக நாடுகள் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்தின் பிடியில் சிரியா மக்கள்!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மரணத்தின் பிடியில் சிரியா மக்கள்

கேள்வி: அதிக அளவில் குண்டு மழை பொழிவதால் என்னதான் சாதிக்க முடியும்?

பதில்: மேற்குலக நாடுகளின் தலையீடு சிரியாவில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப் போரில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் முயற்சி அல்ல என்பது தெளிவாகிறது.

இது ரசாயன ஆயுதங்கள் பற்றியது. சிரியாவின் டூமா மற்றும் பிரிட்டனின் சலிஸ்பர்ரியில் இத்தகைய தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தாக்குதலுக்கு இயல்பாகவே பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக இவை ஆகிவிடுமோ என்று மேற்குலக வல்லரசு நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளைதான் இந்த தாக்குதல் சுட்டுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

கேள்வி: ரஷ்யா ஒரு மூலைக்கு தள்ளப்பட்டுவிட்டால், அது அணு ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கலாம். அமெரிக்கா ஒரு கப்பலை இழந்துவிட்டால் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் தொடுப்பதற்கு வழிகாட்டலாம். இத்தகைய நிலைமைக்கு வெகுதொலைவில் இருக்கிறோமா அல்லது இது தொடர்பாக உண்மையிலேயே ஆபத்து உள்ளதா?

பதில்: இதில் இருந்து உண்மையிலேயே வெகுதொலைவில்தான் இருக்கின்றோம். ஆனால், ஆபத்தான தருணங்கள் இல்லை என்பதாக இது பொருள்படவில்லை.

சிரியா தொடர்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் சண்டையிட்டு கொள்வதைப் பார்க்க யாரும் விரும்பவில்லை.

இவ்வாறு நடைபெற வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட விரும்பவில்லைதான்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் லெபனானிலுள்ள ரஷ்யத் தூதர் அளித்த பேட்டி ஒன்றில், மேற்குலக நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிப்பது என்று அச்சுறுத்துவது போலத்தான் தோன்றியது.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால், சிரியாவுக்கு ஆதரவு அளிக்கும் தொலைக்காட்சியில் அரேபிய மொழியில் அவர் பேசியிருந்தார்.

ஒருவேளை ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம்.

கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவும், ரஷ்யாவும் சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன.

பெரும்பாலும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாத குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளாகவே அவை அமைத்தன.

இந்த நிலையில், அமெரிக்காவும், ரஷ்யாவும் இலக்குகளை பகிர்ந்து கொண்டு செயல்பட்டன. ஆனால், இப்போர் நேரெதிர் துருவங்களாக நிற்கின்றன.

எதாவது ஒரு தரப்பு இன்னொரு தரப்பு மீது வேண்டுமெனறோ அல்லது எதிர்பாராத விதமாகவோ தாக்குதல் நடத்தி விட்டது என்றால், அதன் பிறகு நடைபெற்றுகின்ற நிகழ்வுகள் கட்டுபாடுகளை மீறி சென்றுவிடும்.

இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரின்போது, செயல்பட்ட செய்தி தொடர்பு சாளரங்கள் இன்னும் செயல்படுகின்றன என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. அவை பயன்படுத்தப்படும் என்று நம்புவோம்.

சிரியா: கொடூர தாக்குதல்களால் தொடர்ந்து வெளியேறும் மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா: கொடூர தாக்குதல்களால் தொடர்ந்து வெளியேறும் மக்கள்

கேள்வி: நேட்டோ ஒரு கூட்டணிபோல ஏன் செயல்படுகிறது? உலக நாடுகள் முழுவதும் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அல்லவா இது முதலில் தொடங்கப்பட்டது அல்லது இதனை நேட்ட்டோ மறந்துவிட்டதா?

பதில்: நேட்டோ, உலக நாடுகளில் அமைதியை காக்கின்ற அமைதிப்படை அல்ல.

கூட்டாக பாதுகாப்பு மேற்கொள்ளும் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ராணுவ கூட்டணிதான் நேட்டோ.

2011ம் ஆண்டு லிபியா போன்ற, கூட்டணிக்கு நேரடி அச்சுறுத்தல் வழங்காத மோதல்களில் தலையிட கடந்த காலத்தில் நேட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதுவே இப்போதும் நடைபெறும் என்று நம்புவதற்கில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

நேட்டோவின் உறுப்பு நாடாக விளங்குகின்ற துருக்கி, சிரியா போரில் தனியொரு நாடாக ஈடுபட்டுள்ளது.

சிரியாவின் வட பகுதியிலுள்ள ஆஃப்ரினில் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி படைப்பிரிவுகள் இன்னும் போரிட்டு வருகின்றன.

சிரியாவின் ரசாயன ஆயுத நிலைகள் மீதான தாக்குதலில் நேட்டோவை ஈடுபடுத்துவது அரசியல் சிரமங்கள் மிகுந்ததாகவே அமையும்.

ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: