சிரியா: துருப்புக்களை திரும்ப பெறாமல் இருக்க டிரம்பை சம்மதிக்க வைத்தாரா மக்ரோங்?

  • 16 ஏப்ரல் 2018

சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள அதிபர் டிரம்பிடம் கூறியதாக அதிபர் மக்ரோங் கூறியுள்ளார்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

ரசாயன ஆயுத தாக்குதல் என்று கூறப்படுவதற்கு பதிலடியாக சிரியா அரசு படைகளின் தளங்களை குறி வைத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள டிரம்பிடம் கூறியதாகவும் மக்ரோங் கூறியுள்ளார்.

நட்புறவு கொண்டுள்ள இவர்கள் இருவரும், இந்த ராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்னர், பலமுறை பேசி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்ரோங் இவ்வாறு தெரிவித்த பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், "அமெரிக்காவின் திட்டம் மாறவில்லை. அமெரிக்கா, படைப்பிரிவுகளை எவ்வளவுக்கு விரைவாக நாடு திரும்ப செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்ற அதிபர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption எந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்

ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை முற்றிலும் ஒழித்து விடுவதோடு, அந்த குழு மீண்டு வருவதை தடை செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதை நாட்டு மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தபோது வாஷிங்டனில் டிரம்ப் வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை #GroundReport

கோவை: காஷ்மீர் வல்லுறவு குறித்து பேசிய சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம்

'சிரியா ஜனநாயக படைப்பிரிவுகள்' என்று அழைக்கப்படும் குர்து இன மற்றும் அரபு ஆயுதப்படையினர் இணைந்து செயல்படும் கூட்டு படைக்கு ஆதரவு தெரிவித்து சிரியாவின் கிழக்கு பகுதியில் 2,000 படையினரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: