உலகப் பார்வை: சிட்னி காட்டுத் தீ வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டதா?

  • 16 ஏப்ரல் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிட்னி காட்டு தீ வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டதா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர வீடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய காட்டு தீ, வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்னளனர்.

கடந்த சனிக்கிழமை பற்றி எரிந்த இந்த தீயால் இந்த நகரத்தின் தென்புறத்திலுள்ள 2,500 ஹெக்டேர் நிலம் எரிந்து கருகியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்பகுதிவாசிகள் சிலர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அச்சுறுத்தல் தணிவடைந்துள்ளதாக தீயணைப்பு படையினர் கூறியுள்ளனர்.

குத்தி கொல்லப்பட்ட இடத்தில் திருடரின் பிறந்த நாளில் உறவினர் அஞ்சலி

படத்தின் காப்புரிமை PA

திருடியபோது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் அந்த திருடரின் பிறந்தநாளில் மலர்கள் வைத்து உறவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஓய்வூதியம் வாங்கி வரும் ஒருவரின் வீட்டில் திருடியபோது கத்தியால் குத்தப்பட்டு இந்த திருடர் கொல்லப்பட்டார்.

லண்டனின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஹீதர் கிரீனில், சௌத் பார்க் கிரசென்டில் ஹென்றி வின்சென்ட் கொல்லப்பட்ட இடத்திற்கு மலர்கள், பலூன்கள் மற்றும் பதாகையை பெண்கள் குழு ஒன்று கொண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளது.

கொலை செய்ததாக சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட 78 வயதான வீட்டு உரிமையாளர் ரிச்சர்ட் ஒஸ்பர்ன் புரூக்ஸ், மேலதிக நடவடிக்கை எதும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்,

படத்தின் காப்புரிமை PA

திருடர் வின்சென்ட்க்கு அஞ்சலி செலுத்தியிருப்பதால் இந்த சமூக மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ஆனால், "நாங்கள் வன்முறை உருவாக்க வரவில்லை" என்று உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பில் ஜீவஸ் எப்வரோடு ஏப்ரல் 4ம் தேதி ஒஸ்பர்ன் புரூக்ஸின் வீட்டில் திருடியதாக சந்தேகப்படும் வின்சென்ட்க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 38வது பிறந்தநாளாகும்.

இவருடைய பிறந்த நாளை அடையாளப்படுத்திய இந்த பெண்களை காவல் காத்து கொண்டு வந்த 5 போலீஸ் அதிகாரிகள், பலூன்களையும், பதாகையையும் அந்த வீட்டின் தோட்ட சுவரில் தொங்கவிடுவதை தடுத்துவிட்டனர்.

சிரியா தாக்குதல்: எம்பிக்களின் கேள்விகளை எதிர்கொள்ளும் தெரீசா மே

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியா அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு எடுத்த முடிவுக்கு எதிரான கேள்விகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் என்று சந்தேகப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவின் படைதளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸோடு பிரிட்டன் சேர்ந்து கொள்வதற்கு முன்னால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன,

எதிர்காலத்தில் இது போன்ற தலையீடுகள் நடைபெறும்போது, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தெரிவித்திருக்கிறது.

2002 காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தும் பர்மிங்ஹாமில் கொண்டாட்டம்

படத்தின் காப்புரிமை BIRMINGHAM 2022

2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்து பொறுப்பை ஏற்றிருப்பதை பர்மிங்ஹாம் நகரம் பெரிதாக கொண்டாடியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018 காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு நிகழ்வின்போது, அடுத்தாக 2022ம் ஆண்டு இந்த போட்டியை நடத்தும் பொறுப்பு பர்மிங்ஹாம் நகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வண்ணமயமாக ஒளிர்ந்த விக்டோரியா சதுக்கத்தில் இந்த விளையாட்டு போட்டியின் கொடி லார்ட் மேயர் அனி அண்டர்வுட்டிடம் வழங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: