அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் - முன்னாள் உளவுத் துறை தலைவர்

அதிபராக இருப்பதற்கு டிரம்ப் அறநெறிப்படி தகுயில்லாதவர் என்று அமெரிக்க பெடரல் உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

டிரம்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு கோமி தனது முதல் நேர்காணலை ஏபிசி செய்தி ஊடகத்துக்கு வழங்கினார்.

அதில் டிரம்ப் தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என்றும், நீதி வழங்கப்படுவதை டிரம்ப் தடுக்கலாம் என்றும் கோமி தெரிவித்தார்.

இந்த நேர்முகம் ஒளிபரப்பாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், ஜேம்ஸ் கோமி "பல பொய்களை" கூறியுள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

"மனதளவில் திறமையற்றவராக அல்லது டிமன்சியாவின் தொடக்க நிலையில் டிரம்ப் இருப்பதை நான் பரிமாறி கொள்ளவில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏபிசி தொலைக்காட்சியின் 20/20 நிகழ்ச்சியில் கோமி தெரிவித்திருந்தார்.

"அதிபராக இருப்பதற்கு அவர் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என்று நான் நினைக்கவில்லை ஆனால் அறநெறிப்படி அதிபராக இருக்க அவர் தகுதியற்றவர் என்று எண்ணுகிறேன்" என்று கோமி கூறியுள்ளார்.

"எங்களுடைய அதிபர் மரியாதையின் பிரதிநிதியாக, நாட்டின் மதிப்பீடுகளை கடைபிடிப்பவராக விளங்க வேண்டும். உண்மைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் ஆனால் டிரம்பால் இதனை செய்ய முடியவில்லை" என்று ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ஜேம்ஸ் கோமிக்கும் இடையில் நிலவும் நீண்டகால சர்ச்சையின் சமீபத்திய மேம்பாடு இந்த தொலைக்காட்சி நேர்முகமாகும்.

இதனை தொடர்ந்து கோமியின் வரலாற்று பதிவாக வெளிவரவுள்ள 'உயர்வான விசுவாசம்: உண்மை, பொய்கள் மற்றும் தலைமைத்துவம்' என்று பொருள்படும் 'எ ஹெய்யர் லாயலிட்டி: ட்ருத், லைஸ் அன்ட் லீடர்ஷிப்" என்கிற புத்தகம் இந்த சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளது.

தன்னுடைய புத்தகத்தை அமெரிக்க பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் விளம்பரப்படுத்தி வருகிறார்.

"மிக மோசமாக மீளாய்வு செய்யப்பட்டுள்ள புத்தகம்" "பெரிய கேள்விகளை" எழுப்புகிறது என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், கோமியை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்