சிரியா: ரசாயன தாக்குதல் நடந்த இடத்தில் "ஆதாரங்களை அழிக்கவில்லை" - ரஷ்யா

சிரியா படத்தின் காப்புரிமை AFP

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் உள்ள ஆதாரங்கள் எதிலும் தலையிடவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பிபிசிக்கு பேட்டியளித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லவ்ரவ், "தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள ஆதாரங்களில் ரஷ்யா தலையிடவில்லை என தாம் உத்தரவாதம் அளிப்பதாக" கூறினார்.

ஏப்ரல் 7ஆம் தேதியன்று ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீண்டும் மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

"ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது என ஊடக செய்திகளை வைத்தும் சமூக ஊடகங்களின் அடிப்படையிலும்தான் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இதனை கூறுகின்றன" என்று லவ்ரவ் கூறினார்.

நடந்ததாக கூறப்படும் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகம் என்று கூறிய அவர், சர்வதேச அதிகாரிகள் டூமா நகரத்திற்கு சென்றடையும் ஒரு நாள் முன்பு அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஆய்விற்காக சிரியாவில் உள்ள அதிகாரிகள் இன்னும் டூமாவிற்கு சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்