உலகப்பார்வை: 40 வருடத்திற்குப் பிறகு சௌதி அரேபியா பார்த்த முதல் சினிமா என்ன?

  • 21 ஏப்ரல் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

40 வருடத்திற்குப் பிறகு சௌதி அரேபியா பார்த்த முதல் சினிமா என்ன?

படத்தின் காப்புரிமை AFP

கிட்டத்தட்ட 40 வருடங்களில் முதல்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்பட்டுள்ளது. அமெரிக்க படமான பிளாக்பாந்தர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் இணையத்தில் விற்று தீர்ந்துபோனது.

ரஷ்யாவுக்கு எதிராக வழக்கு

படத்தின் காப்புரிமை BBC/ REUTERS/ EPA

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறி, ரஷ்யா மீதும், அதிபர் டிரம்பின் பிரசாரம் மீதும், விக்கிலீக்ஸ் வலைத்தளம் மீதும் ஜனநாயகக் கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மிகப்பிரபல இசை நட்சத்திரம் மரணம்

படத்தின் காப்புரிமை Reuters

உலகின் மிகப்பிரபல இசை நட்சத்திரங்களில் ஒருவரான ஸ்வீடனை சேர்ந்த அவிசி(28) மரணமடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஹிட்லர் பிறந்தநாளில் ஒன்று கூடிய நாஜி ஆதரவாளர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஹிட்லரின் பிறந்தாளை ஒட்டி, ஜெர்மனியின் ஒஸ்டிட்ஸ் நகரத்தில் கூடிய நூற்றுக்கணக்கான நாஜி ஆதரவாளர்களைக் கலைப்பதற்கான, கவச வாகனங்களுடன் ஜெர்மனி போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்