உலகப் பார்வை: சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது ஃபிரான்ஸ்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்

படத்தின் காப்புரிமை EPA

ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைப்பு, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான சிறைத்தண்டனை அறிமுகம் உள்ளிட்ட பல விடயங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

’பதற்றம் தணிந்தது’

ஐ.நாவின் சிரியாவுக்கான தூதர் ஸ்டஃபன் டி மிஸ்டுரா , ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ மற்ற கூட்டம் ஒன்று சிரியா போர் குறித்த பதற்றத்தை தணிக்க உதவியதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவால், இந்த உலகம் மிகவும் ஆபத்தான தருணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் உணர்ந்ததாக தெரிவித்தார்.

இருப்பினும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அந்த கூட்டம் பதற்றத்தை குறைத்தாக தெரிவிக்கிறார்.

154 வருட வரலாற்றில் கட்சியின் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு

படத்தின் காப்புரிமை Reuters

ஜெர்மனியில் ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயகவாதிகள் (எஸ்.பி.டி) கட்சியின் 154 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதாகும் ஆண்ட்ரியா நஹில்ஸ் ஜெர்மனியின் முன்னாள் தொழிற் துறை அமைச்சராவார்.

காலநிலை ஒப்பந்தத்துக்கு நிதியளிக்க நியூயார்க்கின் முன்னாள் மேயர் விருப்பம்

படத்தின் காப்புரிமை Reuters

பாரிஸ் காலநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகியதால், அந்நாடு ஏற்கனவே அளிப்பதாக ஒப்புக்கொண்ட நிதியான 4.5 மில்லியன் டாலர்களை செலுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயரான மைக்கேல் ப்ளூம்பெர்க் அறிவித்துள்ளார்.

திரும்பபெறப்பட்ட சீர்த்திருத்தம்

படத்தின் காப்புரிமை AFP

நிரகுவா நாட்டின் ஓய்வூதிய திட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை எதிர்த்து கடந்த புதன்கிழமை முதல் நாடுமுழுவதும் நடந்து வரும் கண்டன போராட்டங்களை தொடர்ந்து அதை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டேகா அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: