பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வாரிசின் பெயர் லூயிஸ்

  • 27 ஏப்ரல் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் தங்களது மூன்றாவது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

மத்திய லண்டனில் லிண்டோ விங் ஆஃப் செயின்ட் மேரிஸ் மருத்துவனையில் பிறந்துள்ள இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும்.

கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் அவரது மனைவி கேத்திரினுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை ஏப்ரல் 23ஆம் தேதியன்று பிரிட்டிஷ் நேரப்படி 11.01 மணிக்குப் பிறந்தது. மேலும், அக்குழந்தை 8 பவுண்டு 7 அவுன்ஸ் எடையிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

கேம்பிரிட்ஜ் இளவரசர் லூயிஸ் என்று குழந்தை அழைக்கப்படும் என்று கென்சிங்டன் அரண்மனையின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மகனான ஜார்ஜின் நடுப்பெயர்களுள் ஒன்றாகவும் லூயிஸ் உள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு ஐரிஷ் படைகளால் கொல்லப்பட்ட இக்குழந்தையின் மூத்த கொள்ளு மாமாவான லார்ட் மவுண்ட் பேட்டனின் முதல் பெயரும் லூயிஸ் ஆகும்.

ஆர்தர் என்பது இளவரசரின் நடுப்பெயர்களுள் ஒன்றாகும். பிரிட்டன் அரசியின் தந்தையான அரசர் ஜார்ஜ் VI நடுப்பெயரில் ஒன்றாகவும் ஆர்தர் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: