சீனா: ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை

  • 27 ஏப்ரல் 2018
சீனா

சீனாவில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது ஒருவர் கத்தியால் நடத்திய தாக்குதலில் ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டதாகவும் 19 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வட சீனாவின் ஷாங்க் மாகாணத்தில் நடந்த இந்த சம்பவம் அந்நாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாகும்.

மாணவர்களின் வயது வெளியிடப்படாவிட்டாலும், நடுநிலை கல்வி பயிலும் மாணவர்கள் அதாவது பன்னிரண்டு முதல் பதினைந்து வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் எனவும், இரண்டு பேர் ஆண்கள் என போலீஸார் கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதையும் போலிசாரால் வெளியிட முடியவில்லை.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், போலிஸ் காவலில் உள்ளார்.

ஜாவோ என்ற 28 வயதான அவர், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என போலிஸார் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்