உலகப் பார்வை: நீதிமன்ற விசாரணையை சந்திக்கிறார் வத்திக்கான் பொருளாளர்

  • 1 மே 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை.

படத்தின் காப்புரிமை Getty Images

செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.

அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் குறித்து விசாரிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், சிலவற்றிற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் ஆஸ்திரேலிய நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

பதவி விலகுகிறார் வாட்சப் தலைமை நிர்வாகி

வாட்சப்பின் தலைமை நிர்வாகியும், துணை நிறுவனருமான ஜான் கோம், பணியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முகநூல் பதிவில், தொழில்நுட்பத்துக்கு அப்பாற்பட்டு தான் விரும்பும் சில செயல்களை செய்ய நேரம் எடுத்து கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என வாஷிங்டன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராகும் எதிர்க்கட்சி தலைவர்

அர்மேனியாவின் எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யனை நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

பல வாரங்களாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த பாஷின்யான் பிரதமருக்கான ஒரே வேட்பாளர்.

அர்மேனியாவின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி பதற்றத்தை தணிய செய்ய வேட்பாளரை நிறுத்த போவதில்லை என முன்னதாக தெரிவித்திருந்தது.

குடியரசுக் கட்சி 1999ஆம் ஆண்டிலிருந்து அர்மேனிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு நீட்டிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

எஃகு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்பட்ட வரி குறித்து கனடா, ஐரோப்பா மற்றும் மெக்ஸிகோவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை மேலும் முப்பது நாட்கள் நீட்டித்துள்ளதாக டிரம்ப் அரசாங்கம் தெரிவித்துள்ள்ளது.

அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் எஃகுக்கு 25 சதவீத வரியும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

கனடா, ஐரோப்பா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் இந்த வரி பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

ஆனால், இந்த பெயர் நீக்கப்பட்டியலில் சீனா இடம்பெறவில்லை. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது சீனா வரி விதித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: