கொரியாவிடம் இருந்து ஏன் இந்தியா-பாகிஸ்தான் கற்றுக்கொள்ளக் கூடாது?

இந்தியா, பாகிஸ்தான் படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியாவும், தென் கொரியாவும் இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பிரிவுக்கு பின்னர் 3 ஆண்டுகள் சண்டையிட்டன. கடந்த 65 ஆண்டுகளாக இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. இப்படிப்பட்ட இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்து கைக்குலுக்கும் போது, இதே செயலை ஏன் இந்தியா மற்றும் பாகிஸ்தானால் செய்ய முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வரும் பதிவுகளை படித்து எனக்கு அலுத்துவிட்டது.

ஆனால் கொரியாவின் உதாரணம் இந்தியா, பாகிஸ்தானுக்குப் பொருந்தாது என்று நான் நம்புகிறேன். இதற்குக் காரணம் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வித்தியாசமான நாடுகள். ஆனால், இரண்டு கொரிய நாடுகளும் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியைப் போன்றது.

ஜெர்மனியைப் போன்றே ஒரு நாளில் அவர்கள் இருவரும் சேரலாம். ஏனெனில் அவர்கள் சேர விரும்புகிறார்கள். இரண்டு கொரிய நாடுகளின் தலைவர்களின் கருத்துகளும், பார்வைகளும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் ஒரே மொழி, இனம், நிறம், உணவு உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், ஒரு கற்பனைக்கு வட கொரியா ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாகவும், தென் கொரியா ஒரு இந்து பெரும்பான்மை நாடாகவும் இருந்திருந்தால், 72 ஆண்டு பிரிவுக்குப் பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருப்பார்கள்?

கொரியர்களின் மூக்குகள், ஒருவருக்கொருவருடன் எளிதில் கலக்கும் வகையில் உள்ளன. நமது நீளமான மூக்குகளை வெட்ட முடியுமே தவிர, மற்றவர்களுடன் கலக்க முடியாது.

எனவே, நீண்ட மூக்குகள் இருந்தும், நம்மால் இரண்டு சாதாரண நாடுகளைப் போல வாழ முடியாதா? ஆமாம். நம்மால் முடியும். ஆனால் நாம் ஏன் இதை செய்ய வேண்டும்? பிறகு வாழ்க்கை சலிப்பாக இருக்காதா? உலகின் மற்ற பகுதிகளில் இருந்து நாம் எவ்வாறு வேறுபடுவது?

படத்தின் காப்புரிமை NARINDER NANU / GETTY IMAGES

நம்மிடம் காஷ்மீரும், அணு ஆயுதங்களும் உள்ளன. ஆர்எஸ்எஸ் பற்றியும், ஹபீஸ் சையத் பற்றியும், ரா அமைப்பு பற்றியும், ஐஎஸ்ஐ பற்றியும், ஆஃப்கானிஸ்தான் பற்றியும் கருத்துக்கள் உள்ளன. ஒருவருக்கொருவர் சந்திக்காததற்கு நூற்றுக்கணக்கான சாக்குகள் உள்ளன.

எல்லையை ஒட்டி வாழும் வறட்டு பார்வை கொண்ட வயதான பெண்களை தவிர, கொரியாவில் வேறு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது. அவர்களின் நிலை என்ன நமது நிலை என்ன? இந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை இனியும் தீர்க்கப்படாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: