படை பலத்தில் சரிவா? என்ன சொல்கிறது ஆப்கானிஸ்தான்?

  • 1 மே 2018
படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்று ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் வலிமை கடுமையாக குறைந்துவிட்டது என கூறியதையடுத்து ஆஃப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் நாட்டு கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான படை வீரர்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சிகர் என அறியப்படும் அமெரிக்க கண்காணிப்பு குழுவின் சமீபத்திய அறிக்கையில் கடந்த வருடத்தை விட பத்து சதவீதம் அளவுக்கு படை வீரர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு, பெரும் மரணங்கள் மற்றும் படையினர் ராணுவத்தை விட்டுச் செல்லுதல் ஆகியவை ஆகியவை குறிப்பிட்ட காரணங்களாகும் என்று குறிப்பிட்டது.

தற்போது ஆப்கன் பாதுகாப்பு படைகளில் மூன்று லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். ஆப்கானிஸ்தானில் திங்களன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஒன்பது செய்தியாளர்கள் உட்பட கிட்டதட்ட 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: