ரஷ்யாவின் ராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி

ரஷ்யாவின் ராணுவ செலவினம், கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக சென்ற வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Sean Gallup

ஸ்டாக்ஹாம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், ராணுவத்துக்கு உலக நாடுகள் எவ்வளவு செலவு செய்கின்றன என்பது குறித்த அதன் ஆண்டு மதிப்பீட்டில் 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக கூறியுள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.

அதே சமயம் சீனா ராணுவத்துக்கு செலவு செய்யும் தொகையை சுமார் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மிகப்பெரும் ராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் ராணுவ செலவு நிலையாக உள்ளது. அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் ராணுவ செலவின் கூட்டுத் தொகைக்கு அமெரிக்காவின் செலவு தொகை சமமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்