ஆப்கானிஸ்தானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்

  • 6 மே 2018

ஆஃப்கன் மின்சார நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த ஏழு பொறியாளர்கள் மற்றும் ஒரு ஆஃப்கானியர் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தாலிபன்களால் கடத்தப்பட்டனர் என்று ஆஃப்கன் பாக்லன் காவல்துறை உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை ZABELIN

இந்த நிறுவனமானது ஆஃப்கனில் உள்ள பாக்லன் மாகாணத்தில் இயங்குகிறது.

பாக்லன் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா சுஜா, அந்த பொறியாளர்கள் வடக்கில் உள்ள பாக்லன் மாகாணத்தில் உள்ள கொஜால்வான் பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது தாலிபன் தளபதி ஷஹீன் குழுவால் கடத்தப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தில் 150 இந்தியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, "ஆஃப்கன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். மேலதிக தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்