ஆஃப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி

ஆஃப்கனின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் பலியானார்கள், டஜன் கணக்கானோர் காயம் அடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதிய வழிப்பாட்டுக்காக மசூதியில் திரண்டு இருந்தபோது இந்த குண்டுவெடிப்பானது நிகழ்ந்துள்ளது.

அந்த மசூதியானது வாக்காளர் பதிவு மையமாகவும் செயல்படுகிறது.

காயமடைந்த சிலர் அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்ற தாக்குதல்களை இதற்கு முன்பு ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தி இருக்கிறது.

அக்டோபரில் நடக்க இருக்கும் ஆஃப்கன் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல வாக்காளர் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாக்காளர் பதிவு மையங்களை குறி வைத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஏப்ரல் 22ஆம் தேதி காபூலில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 57 பேர் பலியானார்கள்.

காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. அதுபோல, மக்கள் யாரும் தேர்தலில் பங்கேற்க கூடாது என்று தாலிபன் அமைப்பும் எச்சரித்து இருந்தது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :