என்ன சொல்கிறது இரான் அணுசக்தி ஒப்பந்தம்? - 5 முக்கிய அம்சங்கள்

  • 9 மே 2018

ஒபாமா ஆட்சி காலத்தில் இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் முறித்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Chip Somodevilla

''இது அழுகி சிதைந்து போன ஒப்பந்தம்'' என டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய கூட்டாளிகளின் ஆலோசனைக்கு எதிராக முடிவு எடுத்துள்ள டிரம்ப் மீண்டும் இரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் .

இதற்கு பதிலடியாக அணுசக்தி மற்றும் அணுஆயுத தயாரிப்புகளுக்கு அவசியத்தேவையாக கருதப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மீண்டும் துவங்கவுள்ளதாக இரான் தெரிவித்தது.

இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் என்ன?

1. முழுமையான கூட்டு செயல்திட்டத்தின்படி, அணு உலை எரிபொருள் மற்றும் அணு ஆயுதத்துக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தின் கையிருப்பை பதினைந்து ஆண்டுகளுக்கு குறைக்கவும், யுரேனியத்தை செறிவூட்ட உதவும் மையநீக்கி இயந்திரத்தை நிறுவுதலை பத்து ஆண்டுகளில் குறைப்பதற்கும் இரான் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது.

2. மேலும் கன நீர் வசதியை மாற்றியமைப்பதற்கும் இரான் ஒப்புக்கொண்டது . ஏனெனில் கன நீரானது அணுகுண்டை தயாரிக்க உதவும் புளூட்டோனியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

3. இரான் இத்தகையை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா ஆகியவை இரானை முடக்குவதற்காக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கைகளை திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.

4. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஜெர்மனியும் சேர்த்து ஆறு நாடுகளுக்கும் இரானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. இரான், தனது அணு திட்டமானது முழுமையாக அமைதியான வழியில் நடப்பதாக தெரிவித்தது, மேலும் சர்வதேச அணுசக்தி நிறுவனமானது இந்த ஒப்பந்தத்தில் இரான் முறையாக இணங்கி செயல்படுகிறதா என்பதை சரிபார்த்தது.

படத்தின் காப்புரிமை ATTA KENARE

மோதல் போக்கால் என்ன நடக்கிறது?

பிபிசியின் பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகள் நிருபர் ஜோனாதன் மார்கசின் பகுப்பாய்வு

ஒரு ஒப்பந்தத்தில் இருந்து தனது பேனாவின் மூலம் வெளியேறியிருக்கும் அதிபர் டிரம்ப்பின் முடிவு இரானின் அணுசக்தி லட்சியங்களை கட்டுப்படுத்த முனைகிறது.

ஒப்பந்தத்தின் குறைபாடுகள் மீது கடுமையான தாக்குதலை டிரம்ப் தொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக மாற்று செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

வாஷிங்டனின் சில நெருங்கிய கூட்டாளிகளுடனான அமெரிக்கவின் ராஜிய உறவுகள் மோதல் போக்கை கடைபிடிக்க வித்திட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பேரழிவை உண்டாக்கும் புதிய பிராந்திய போரை அதிபர் டிரம்ப் கொண்டுவரலாம் என்ற பயத்தை மேலும் அதிகமாகியிருக்கிறது இம்முடிவு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: