"டிரம்புக்கும், கடவுளுக்கும் நன்றி"- வடகொரியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள்

வடகொரிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் படத்தின் காப்புரிமை Reuters/AFP

வட கொரிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 3 அமெரிக்கர்கள், அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஆண்டுரூஸ் விமானப் படைத்தளத்தில் வந்து சேரும்போது, அதிபர் டிரம்ப் அவர்களை நேரில் சென்று வரவேற்கிறார்.

டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அதிபர் டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் சந்திப்புக்கான இடமும் நேரமும் "மூன்று நாட்களுக்குள் அறிவிக்கப்படும்" என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

"அமெரிக்கர்களை விடுதலை செய்த கிம்முக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

யார் அந்த மூவர்?

  • கிம் ஹேக் சாங்: விரோதச் செயல்களில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் 2017 மே மாதம் கைது செய்யப்பட்டார் இவர். முன்னதாக தம்மை கிறிஸ்துவ மிஷனரி என்று கூறிக்கொண்ட இவர், பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பகல்கலைக் கழகத்தில் ஒரு பரிசோதனைப் பண்ணை தொடங்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.
  • டோனி கிம்: கிம் சேங்-டக் என்றும் அறியப்படும் இவரும் பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவரே. உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஏபரல் மாதத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் வட கொரியாவில் மனிதாபிமானப் பணிகளை செய்து வந்ததாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • கிம் டாங்-சுல்: 60 வயதுக்கு மேற்பட்ட மத போதகரான இவர் 2015ல் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் கடும் ஊழியத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: