மேகன் மற்றும் ஹாரி திருமணம் பற்றிய கேள்விகளும், பதில்களும்

படத்தின் காப்புரிமை ALEXI LUBOMIRSKI

இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் அமெரிக்க நடிகையை திருமணம் செய்யும் மே 19 ஆம் தேதி இங்கிலாந்தின் மீது அனைவரின் கண்களும் இருக்கும். கற்பனை நிறைந்த தேவதைக் கதையில் வரும் திருமணம் போல் இந்த திருமணம் ஹாலிவுட் முதல் ஹம்ஸ்ஃபையர் வரை அனைவரது கற்பனையையும் கிளறும் விதமாக அமைந்துள்ளது.

ஆனால்,பிரிட்டன் மக்கள் கேட்க நினைத்தும் பார்க்காத கேள்விகள் இந்த திருமணத்தில் உள்ளன.

யார் யாரெல்லாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்?

இங்கிலாந்து ராணியின் பேரனும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த வேல்ஸ் இளவரசர் டயானாவின் மகனுமான இளவரசர் ஹாரி, ஹாலிவுட் நடிகை மெகன் மார்க்கெலை மணமுடிக்கிறார்.

ஹாரி பட்டத்திற்கு காத்திருப்பவர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

ஹாரியும் மார்க்கெலும் தங்களுடைய பொதுவான நண்பர்கள் மூலம் 2016 ஆம் ஆண்டு சந்தித்தனர். இருவரும் இரவு விருந்தின் போது கோழி ஒன்றை வறுத்துக் கொண்டிருந்த போது இளவரசர் ஹாரி தன் காதலை தெரிவித்தார்.

சரி, அதனால் எனக்கென்ன?

நீங்கள் காதல் மீது அக்கறை கொண்டவரா? செல்வந்தர்கள் மற்றும் பிரபல்யங்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுபவரா? இளவரசர் சார்லஸ் டயானா திருமணத்தை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவரா?

இந்த கேள்விகள் ஏதேனும் ஒன்றிற்கு ஆம் என்றால் நீங்கள் இந்த திருமணத்தையும் காண ஆவலாய் இருப்பீர்கள். இந்த அரச குடும்பத்தின் திருமணம், காதல், மரபு மற்றும் நிறை குறைகள் நிரம்பிய அழகான திருமணமாக கண்கொள்ளாக் காட்சியாக அமையும் என்பது உறுதி.

உங்கள் நாடு அரசர் ஆளும் நாடோ இல்லையோ, நீங்கள் எந்த வகை ஆட்சி முறையை ஆதரிக்கிறீர்களோ, காதல் மற்றும் கவர்ச்சி தாராளமாக தெளிக்கப்பட்ட சுவாரசியமான நடப்புச் செய்தியை வாசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

திருமண நாள் அன்று என்ன நடக்கும்?

இந்த திருமணம், லண்டனுக்கு மேற்கே 21 மைல் (34 கி.மீ.) தொலைவில் உள்ள விண்டசர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் (சேப்பல்) மார்ச் 19ந்தேதி உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும். இந்தியாவில் இருந்து நீங்கள் இந்த திருமணத்தைக் காண வேண்டுமானால் மாலை 4.30 மணிக்கு பி.பி.சி. வேர்ல்டு தொலைக்காட்சியில் காணலாம்.

தேவாலய ஆராதனை நிறைவடைந்ததும் புதுமணத் தம்பதியினர், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இங்கிலாந்து ராணியின் அரசுமுறை இல்லங்களில் ஒன்றான விண்ட்சர் கோட்டை அமைந்துள்ள விண்டசர் நகரைச்சுற்றி வலம் வருவார்கள். தாங்கள் வலம் வருவதற்கு, வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மடக்கக்கூடிய முகட்டைக் கொண்ட சாரட் வண்டியினை புதுமண ஜோடி தேர்வு செய்துள்ளது.

கோட்டையில் உள்ள வரவேற்பு அரங்கமான செயின்ட் ஜார்ஜ் அரங்கில் இந்த ஊர்வலம் நிறைவடையும், அங்கு சுமார் 600 விருந்தினர்களுக்கு மதிய உணவு விருந்தில் பங்கேற்க ராணி அழைப்பு விடுத்துள்ளார்.

அன்று மாலை புது மணத் தம்பதியினர் பிரமாதமாக ஒளியூட்டப்பட்ட ஃபிராக்மோர் மாளிகையில் தங்களுக்கு நெருக்கமான 200 நண்பர்களுக்கு விருந்து அளிப்பார்கள்.

இந்த அரச குடும்பத்தினரின் இல்லத்தின் பின்னணியில் தான் திருமண நிச்சயதார்த்த படங்கள் வெளியிடப்பட்டன.

படத்தின் காப்புரிமை PA
Image caption பெர்க்ஷைரில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இல்லம் ஃபிராக்மோர் ஹவுஸ்

இந்த திருமணத்தால் பிரிட்டன் ஸ்தம்பித்துவிடுமா?

இருக்காது, ஆனால் உங்களுக்கு கூட்டத்தை பார்க்க விருப்பமில்லையெனில் விண்ட்சர் நகரைச் சுற்றிப்பார்க்க செல்லாதீர்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். ஆனால் இது சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான பிரிட்டன் மக்கள் தங்கள் வாரவிடுமுறை நாளான அன்று வழக்கம் போல தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள்.

கால்பந்து ரசிகர்களைப் பொறுத்தவரையில் அன்று எஃப்.ஏ. கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் நாள். அவர்களுக்கு அந்த நாள் தான் முக்கியமான நாளாகும்.

2011 ஆம் ஆண்டு 24 மில்லியன் பிரிட்டன் மக்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் திருமணத்தை தொலைக்காட்சியில் கண்டனர். பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட 10 நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாக ஆனது. 1966 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 32.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர், இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை 1997ஆம் ஆண்டு 32. 1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் திருமணத்தைக் காண பல வழிகள் உள்ளன. பி.பி.சி.யின் அனைத்துத் தளங்களின் மூலம் 2011ல் 34 மில்லியன் பேர் திருமணத்தைக் கண்டு களித்துள்ளனர்.

வில்லியமின் இளைய சகோதரனின் திருமணத்தையும் இதே போல் லட்சக்கணக்கானோர் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் ஹாரி திருமண விருந்து நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சமூக தொலைக்காட்சிகளுக்கு பிபிசி லைசென்ஸ் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய இரவு மற்றும் திருமண நாள் அன்று இரவு பொதுவிடுதிகளுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

திருமண சடங்குகள் எப்படி இருக்கும்?

இங்கிலாந்து கிறிஸ்தவ தேவாலயங்களின் தலைவராக ராணி உள்ளார். இந்த தேவாலயங்கள் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ பிரிவின் ஆங்கிலிகன் சமயத்தைச் சேர்ந்தவை.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேவாலயத்தில் தீவிர உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணமகள் மார்க்கெலுக்கு இங்கிலாந்து தேவாலயத்தில் ஞானஸ்நானம் எனும் திருமுழுக்கு செய்துவைக்கப்பட்டது. கேண்டர்பரி பேராயர், ஜஸ்டின் வெல்பி இந்த திருமுழுக்கினை செய்துவைத்தார்.

பேராயர் வெல்பி தான் இவர்கள் திருமணத்தையும் நடத்திவைப்பார். உறுதியேற்பு, ஆராதனை மற்றும் விவிலியத்தில் இருந்து செய்தி வாசித்தல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெறும்.

இந்த சடங்கில் நற்செய்தி வழங்கும் கரேன் கிப்சன் குழு, மற்றும் கிங்டம் காயர் என்ற பாடல் குழுவும் இடம் பெறுகின்றனர். பாரம்பரிய ஆங்கிலேய பாடல் குழுவுடன், பி.பி.சி.யின் ச016 ஆம் ஆண்டிற்கான இளம் இசையமைப்பாளர் விருது பெற்ற ஷேகு கன்னே-மேசனும் இடம் பெறுவார்.

மார்க்கெல் இளவரசி ஆவாரா?

இளவரசி என்பது பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் மிகவும் சிக்கலான பட்டம். இளவரசர் ஹாரியின் மனைவியாக அவர், மேதகு வேல்ஸ் ஹென்றி இளவரசி என்று அழைக்கப்படுவார்.

அரச குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே "இளவரசி" என்ற பட்டம் அவர்கள் பெயருக்கு முன் வரும். ராணி புது மணத்தம்பதியருக்கு கேம்பிரிட்ஜ் கோமகன் கோமகள் பட்டத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசர் ஹாரி சகோதரர் மற்றும் அவரது அண்ணிக்கும் இந்த பட்டத்தை ராணி வழங்கினார்.

கோமகள் பட்டம் வழங்கப்பட்டதும், மார்க்கெல் கோமகள் மெகன் என்று அழைக்கப்படுவார்.

டயானா அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் இளவரசி டயானா என்று அழைக்கப்படவில்லை. அவர் வேல்ஸ் இளவரசி என்றே அழைக்கப்பட்டார். இளவரசர் சார்லசுடன் விவாகரத்து ஆனதும் அவர் டயானா, வேல்ஸ் இளவரசி என்று அழைக்கப்பட்டார்.

அதேபோல் சாரா ஃபெர்கசன், இளவரசி சாரா என்று அழைக்கப்படவே இல்லை. இளவரசர் எட்வர்டின் மனைவி சோபீ ரிஸ் ஜோன்ஸ் இளவரசி சோபீ என்றே அழைக்கப்பட்டார்.

மார்க்கெலுக்கு மணிமுடி அணியும் வாய்ப்பு கிடைக்குமா?

எந்த பட்டம் கிடைத்தாலும், மார்க்கெல் இளவரசிக்கான மணிமுடியை அணிவார் என்பதில் சந்தேகம் இல்லை. டயானா இறந்த போது, அவர் தன் நகைகளை தன் மகன்களிடம் அவர்கள் தங்கள் மனைவியருக்கு கொடுக்கும் வகையில் ஒப்படைத்தார். கேம்பிரிட்ஜ் கோமகள், பலமுறை மணிமுடியை அணிந்திருந்தார். அரசு கொண்டாட்டங்களின் போது ராணிக்கான நகைகளையும் அணிந்திருந்தார்.

மார்க்கெலின் திருமண உடை அலங்காரம் இந்த நேரத்தில் அரசு ரகசியமாகும்,

மார்க்கெல் என்ன வகை திருமண உடை அணிய தேர்வு செய்கிறார் என்பதை நீங்கள் திருமண நாளன்றுதான் பார்க்க முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இளவரசி டயானா ஸ்பென்சர் மணிமுடியை தன் திருமணத்தின் போது அணிந்திருந்தார். அது அவர் குடும்பத்திற்கு சொந்தமானது.

விருந்தினர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் யார்?

சில பிரபலங்கள் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்தாலும், ஏராளமானோர் உறுதியாக அழைக்கப்படக்கூடியவர்கள் பட்டியலில் உள்ளனர்.

சர் எல்டன் ஜான் அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியையொட்டி தன் இரண்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். தேதி சரியில்லை என்று சொல்லியுள்ளார்.

மெல் பி மற்றும் பிற ஸ்பைஸ் கேர்ள்ஸ் அழைக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்துள்ளார்.

மார்க்கெல், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நல்ல நட்பு கொண்டவர். ரியாலிட்டி டெலிவிஷன் பிரபலம், மில்லி மெக்கின்தோஷுடனும் அவர் நெருக்கமான நட்பு கொண்டுள்ளார்.

இளவரசர் ஹாரி விருந்தினர்களைப் பொறுத்தவரை, அனைத்து அரச குடும்பத்து முகங்களையும் எதிர்பார்க்கலாம், இவர்களைத் தவிர அவரது தந்தை, வளர்ப்புத் தாய் கார்டால் கோமகள், ராணியின் பிற குழந்தைகள் மற்றும் அவர்கள் குழந்தைகள், இளவரசர் ஹாரியின் அத்தை, சித்தப்பா, மாமா மற்றும் மைத்துனர்கள் என்று பெரிய பட்டியலே உள்ளது.

மார்க்கெலின் தந்தை தாமஸ் மார்க்கெல், மணமகளுடன் பக்கவாட்டில் நடந்துவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஒளி அமைப்பாளரான அவர், மெக்சிகோவில் வசிக்கிறார். அவர் உள்ளூர் கடை ஒன்றில், "இமேஜஸ் ஆஃப் பிரிட்டன்: ஏ பிக்டோரல் ஜர்னி த்ரூ ஹிஸ்ட்ரி" என்ற புத்தகத்தை வாசிப்பதை கண்டுபிடித்தார்கள்.

மார்க்கெலின் தாயார் டோரியா ராட்லன் திருமணத்தில் பங்கேற்பார்.

பொதுமக்கள் சுமார் 1200 பேர், பெரும்பாலும், சமூக சேவைகள் புரிந்தவர்கள் இந்த திருமணத்தை விண்ட்சர் கோட்டை வளாகத்திற்கு வந்து திருமணத்தை காண அழைக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கு அழைப்பு கிடையாது?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒருமுறை, இளவரசர் ஹாரியின் தாயார் டயானாவை டேட்டிங் செய்து மகிழ்ந்ததாக வேடிக்கைக்காக சொல்லியிருந்தார். அவர் அழைக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது. இளவரசர் ஹாரி நண்பரான அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா அழைக்கப்படலாம்.

இதைத்தவிர வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாட்டு அரசியல் தலைவர்களும் இதில் அடக்கம். டவுனிங் தெரு அதிகாரிகள் இதற்காக மிகவும் பாடுபட வேண்டியிருந்தது.

எனவே பிரதமர் தெரசா மே மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஜெரெமி கார்பின் ஆகியோரும், டிரம்ப்பும் இளவரசர் ஹாரி நண்பர் ஒபாமா ஆகியோரும் அழைக்கப்பட மாட்டார்கள்.

மார்க்கெலின் தந்தையின் முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு உடன்பிறந்தவர்களுக்கு நிச்சயமாக அழைப்பு இல்லை.

திருமண விருந்தில் யார் யார் பங்கேற்பார்கள்?

இளவரசர் வில்லியம் மணமகனின் மாப்பிள்ளைத் தோழனாக உடன் வருவார். 2011 ஆம் ஆண்டு வில்லியமின் திருமணத்தின் போது இளவரசர் ஹாரி தான் மாப்பிள்ளைத் தோழர்.

"பழிக்குப்பழி இனிமையாக இருக்கிறது" என்றார் இளவரசர் வில்லியம்

மணமகள் மார்க்கெலின் தோழி என்று யாரும் கிடையாது, அவரது திருமண அங்கியை தாங்கிவரும் அனைவரும் குழந்தைகளாக இருப்பார்கள் என்று கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

அரண்மனையின் தகவல் தொடர்பு செயலர் ஜேசன் நாஃப் கூறுகையில், " மார்க்கெலின் நட்பு வட்டம் மிகவும் நெருக்கமானது. அவர் எந்த ஒரு நண்பரையும் விட்டுவிட்டு மற்றவரை தேர்வு செய்ய விரும்பவில்லை."

யார் எங்கே உட்காருவார்கள் என்று நடைமுறை உள்ளதா?

மணமக்கள் உறுதி எடுக்கும் போது நெருங்கிய குடும்பத்தினர் அரச மணமக்களுக்கு அருகில் அமர்வார்கள். இளவரசர் வில்லியம் 2011ல் கேட் ஐ திருமணம் செய்தபோது, கேட்டின் தாயார் கரோல் மிடில்டன் ராணிக்கு அடுத்தார்போல் அமர்ந்திருந்தார்.

அரச குடும்பத்தின் திருமணங்களில் பெண் விருந்தினர் கோமாளித்தனமான தொப்பிகளை ஏன் அணிகிறார்கள்?

நுணுக்கமான தையல் வேலைப்பாடு கொண்ட தொப்பிகளை திருமண விருந்தில் பங்கேற்கும் பெண்கள் அணிவது என்பது, உலகிற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய மாபெரும் கலையம்சம் பொருந்திய பரிசு என்று சொல்லலாம்.

ஆனால் இந்த பாரம்பரியம் எங்கிருந்து வந்தது?

படத்தின் காப்புரிமை Getty Images

நூற்றாண்டுகளாக, பெண்கள் தங்கள் தலைமுடியை பொது இடங்களில் கண்ணியம் காரணமாக மறைத்தனர். இந்த வழக்கம் 1950களில் மறைந்தது. ஆனால் தேவாலயங்களுக்குச் செல்வது உள்ளிட்ட சிறப்பு தருணங்களில் பெண்கள் தங்கள் தலைமுடியை மூடினர்.

அரச குடும்பத்தின் நடைமுறைப்படி, அனைத்து அரச குடும்பத்தின் பெண்களும் அரசு நிகழ்ச்சிகளின் போது தங்கள் தலைமுடியை மூட வேண்டும். மார்க்கெல் ஏற்கனவே தலையை மூடி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெற்ற காமன்வெல்த் தின ஆராதனையின் போது அவர் கிரீம் நிற தொப்பியை அணிந்திருந்தார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்பது எப்படி? திறந்த பார் மாதிரியா?

காசு கொடுத்து குடிக்க வேண்டியது இருக்காது.

விருந்தில் பரிமாறப்படும் உணவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சாம்பெய்ன் ஆறாக ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

எட்டு சாம்பெய்ன் தயாரிப்பாளர்களுக்கு அரச குடும்பத்தின் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணி தன் திருமணத்தின் போது பொலிங்கர் என்ற சாம்பெய்ன் வழங்கினார், ஆனால் பிரபல சாம்பெய்ன்களான மோட் அண்ட் சாண்டன், வியூவே கிளிக்கியோட் ஆகியவையும் அரச குடும்பத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.

அமெரிக்கன் ஒருவர் கேக் தயாரிப்பது ஏன்?

திருமணத்தின் போது ஃபுரூட்கேக் வழங்குவது என்ற அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை மாற்ற மார்க்கெல் விரும்புகிறார்.

அதற்கு பதிலாக அமெரிக்க சமையல்கலை வல்லுநர் கிளேர் ப்டக் திருமணத்திற்கென அருமையான வெள்ளை நிற திருமண கேக்கினை தயாரிக்க விரும்புகிறார்.

மார்க்கெலைப் போன்றே, ப்டக்கும் கலிபோர்னியாவில் வளர்ந்தவர், லண்டனில் வசிப்பவர். அவரது ஹேக்னே பேக்கரி ஒயலெட் கேக்ஸ் நிறுவனம், பருவகாலத்தில் கிடைக்கும், ஆர்கானிக் உட்பொருட்களைக் கொண்டு கேக் தயாரித்து வருகிறது. அவர் மஞ்சள் நிற கொன்றைமலர்கள் கேக்கினை தயாரிக்க உள்ளார். வசந்த காலத்தின் பிரகாசமான வண்ணங்களை இதில் உள்ளடக்கப்படும் .

"இந்த கேக் பட்டர்கிரீமால் மூடப்பட்டு, புது மலர்களால் அலங்கரிக்கப்படும்" என்று கென்சிங்டன் அரண்மனை தெரிவிக்கிறது.

திருமணத்தில் டி.ஜே. உண்டா பேண்டு வாத்தியமா?

பெரும்பாலும் பேண்டு வாத்தியம் தான்.

வதந்திகள் உண்மையானால், ஸ்பைஸ் கேர்ள்ஸ் அழைக்கப்பட்டால், அவர்கள் பிரபல பாடல்கள் இடம்பெறலாம். புது மணத் தம்பதியினராக அவர்கள் முதல் முதலாக நடனமாடுவர்கள்.

அல்லது சார் எல்டன் ஜான் "கேன் யூ ஃபீல் தி லவ் டுனைட் " என்ற பாடலாம்.

எங்களிடம் எந்தவித புலனாய்வுத் தகவலும் இல்லை. ஆனால் வதந்திகளை வைத்துப் பார்க்கும் போது புது மண ஜோடியினர், "விட்டினி ஹூஸ்டனின் "ஐ வானா டேன்ஸ் வித் சம்படி" என்ற பாடலுடன் விருந்து தொடங்கலாம் என்று தி சன் தெரிவிக்கிறது.

இங்கிலாந்திற்கு வெளியே அரச குடும்பத்தின் திருமணத்தை நாம் எப்படி பார்ப்பது?

பி.பி.சி அமெரிக்கா, பி.பி.சி. கனடா மற்றும் பி.பி.சி. வேர்ல்ட் ஆகியவற்றில் திருமண ஒளிபரப்பு இடம்பெறும். பி.பி.சி. வேர்ல்ட் சர்வீஸ் ரேடியோவிலும் வர்ணனையைக் கேட்கலாம்.

பி.பி.சி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருமணத்தை லைவ் ஸ்டிரீமிங் செய்கிறது.

திருமணத்தைக் காண நான் இங்கிலாந்து செல்லலாமா?

அழையா விருந்தாளிகளுக்கு அனுமதியில்லை.

அரச குடும்பத்தினரைக் காண விரும்புபவர்கள், விண்ட்சர் கிராமத்திற்கு சென்று திருமண நேரத்தில் நடைபெறும் ஊர்வலங்களைக் காணலாம், ஏராளமான சமுதாய விருந்துகள், பப் விருந்துகளில் பங்கேற்கலாம்.

நீண்ட வரிசைகளை, ஓட்டல்களில் இடம் கிடைக்காத நிலை மற்றும் பெருந்திரளான கூட்டத்தை எதிர்பாருங்கள்.

கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் திருமணத்திலிருந்து இந்த திருமணம் எப்படி மாறு பட்டது?

தன் சகோதரர் போல் அல்லாமல், இளவரசர் ஹாரீஸ் பட்டத்து இளவரசர் இல்லை. எனவே மேகன் மார்க்கிளுடனான அவரது திருமணம் அரச குடும்பத்து தரத்துக்கு இணையாக மிகவும் கறாராக நடக்கும் திருமணம் அல்ல.

உதாரணத்திற்கு, திருமண நாளை சொல்லலாம். இளவரசர் வில்லியம், கேட் ஐ திருமணம் செய்தது 2011 ஏப்ரல் 29ந்தேதி, வெள்ளிக்கிழமை. இதனால் வங்கிகளுக்கு ஒரு நாள் விடுமுறையை அரசு அறிவித்தது. அதன் மூலம் மக்களும் ஒரு நாள் விடுமுறையில் வீட்டிலிருந்து திருமணத்தை பார்க்க முடிந்தது.

இந்த முறை இளவரசர் ஹாரி திருமணம் மே 19ந் தேதி சனிக்கிழமை நடக்கிறது. ஆகவே வேலைக்கு செல்பவர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கவில்லை.

பல்வேறு அரச குடும்பத்தின் திருமணம் நடைபெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் இளவரசர் ஹாரீஸ்- மார்க்கிள் திருமணம் நடைபெறவில்லை. அவரது சகோதரர் திருமணம், அவது அத்தை, சித்தப்பாக்களில் ஒருவர், ஏன் ராணிக்கும் இங்கே தான் திருமணம் நடந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: