காங்கோ: பரவி வரும் இபோலா தொற்றால் 23 பேர் பலி - அச்சத்தில் மக்கள்

காங்கோ ஜனநாயக குடியரசில் கிராமப் பகுதிகளில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு பரவிவரும் இபோலா நோய் தொற்று, கட்டுப்படுத்த முடியாத நோய் என்ற அளவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightAFP/GETTY

நாட்டின் வட மேற்கு நகரான பண்டகாவில் ஒருவருக்கு இபோலா நோய் தொற்று உள்ளது என்ற தகவலை காங்கோவின் சுகாதாரத்துறை அமைச்சர் இலுங்கா கலேங்கா உறுதி செய்தார்.

130 கிலோமீட்டர் பரப்பளவில் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட பண்டகா நகரில்தான், இம்மாதத்தின் தொடக்கத்தில் இபோலா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கோவின் தலைநகரமான கின்சாஸாவுடன் போக்குவரத்து தொடர்புகள் கொண்ட இந்நகரம் ஒரு பெரிய போக்குவரத்து தலமாக விளங்குகிறது.

இதுவரை காங்கோவில் இபோலா நோய் தொற்றால் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் இந்த நோய் தொற்றால் உயிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

பண்டகாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதல்முறையாக எபோலோ கண்டறியப்பட்டது.

காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. காங்கோ மற்றும் அருகில் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

காங்கோவில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ, சிறப்புக் குழுக்களை அனுப்ப நைஜீரியா ஆலோசித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: