வாதம் விவாதம் : எடியூரப்பாவை முதலைமைச்சராக்கியது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

  • 18 மே 2018
எடியூரப்பா படத்தின் காப்புரிமை RAVEENDRAN

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்பு. அறுதி பெரும்பான்மை இல்லாதபோதும் எடியூரப்பாவை முதலமைச்சராக்கியது ஏற்றுக் கொள்ளக்கூடியதா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

''கோவா, மணிப்பூர் மற்றும் மேஹாலயாவிற்கு ஒரு நீதி கர்நாடகாவிற்கு ஒரு நீதியா? இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பு, தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் இந்திய மக்களின் வாக்குரிமை அனைத்தும் தன்னுடைய மாண்பை இழந்த தினம் இன்று'' என தெரிவித்துள்ளார் கோமான் முகம்மது.

''104 MLA ஆதரவு மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதை கவர்னர் எந்த அடிப்படையில் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்? மீதியுள்ள MLA ஆதரவு எங்கு சென்று பெறுவார் எதிர்கட்சிகளை உடையுங்கள் என்று கூறுவதற்கு ஒரு கவனர் வெட்ககேடு இது ஒரு ஜனநாயக படுகொலை'' என எழுதியுள்ளார் மணி அய்யப்பன்.

''தேர்தலுக்கு முன்பு மக்கள் பின்பு சட்டமன்ற உறுப்பினர் இடையே அரங்கேற்றப்படும் அறமற்ற அரசியல் சதுரங்கத்தாலும், மத்தியில் ஆள்பவரது அழுத்தத்தாலும் அமையும் ஆட்சியில் யார் வேண்டுமானாலும் முதல்வராகப் பதவி ஏற்கலாம் என்ற நடைமுறை வழக்கத்தால் மக்களாட்சி ஆலமரத்தின் அரசியல் சாசன விழுதுகள் ஒவ்வொன்றாக நீதித்துறையின் ஓட்டைகளின் துணை கொண்டு வெட்டப்பட்டு வருவதாகத்தான் எடுத்துக் கொள்ள தோன்றுகிறது.'' என சக்தி சரவணன் என்ற நேயர் எழுதியுள்ளார்.

''ஏற்று கொள்ள கூடியதே ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க பதினைந்து நாள் என்பது குதிரை பேரத்திற்கு தான் வழி வகுக்கும்.'' என பெனியல் என்ற நேயர் தெரிவித்துள்ளார்.

''ஐனநாயகத்தை விரும்புகிறவன் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டான்.'' என்கிறார் தேவா அன்பு

''கட்சி அரசியலில் பெரும்பான்மை தொகுதிகள் பெற்ற கட்சியை அமைப்பது சரியே'' என எழுதியுள்ளார் சந்தோஷ் குமார் ஷெட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: