அமெரிக்கா- வட கொரியா உச்சிமாநாடு: என்ன சொல்கிறார் அதிபர் டிரம்ப்?

  • 18 மே 2018
என்ன சொல்கிறார் அதிபர் டிரம்ப்? படத்தின் காப்புரிமை Getty Images

"லிபியா மாதிரி" போன்ற ஒன்று, வட கொரியாவில் பின்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

"லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது வட கொரியாவில் எச்சரிக்கையை தூண்டியது.

எனினும், அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாடு நடைபெறும் என்று டிரம்ப் நினைக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்று வட கொரியா எச்சரித்திருந்தது.

டிரம்ப் கூறியது என்ன?

இந்நிலையில் "லிபியா மாதிரி" போன்ற ஒன்று வட கொரியாவில் பின்பற்றப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"கிம் ஜாங்- உன் அவர் நாட்டில் இருப்பார், அவரது நாட்டை இயக்குவார், வட கொரியா பணக்கார நாடாக இருக்கும்" என்ற ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப்.

விரைவில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு குறித்து பேசிய டிரம்ப், "வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை குறித்த திட்டத்தில் எதுவும் மாறவில்லை. எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை" என்று கூறினார்.

பேச்சுவார்த்தையில் வட கொரியா கலந்து கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. அப்படி எதுவும் மாறாத பட்சத்தில், அது வெற்றிகரமான சந்திப்பாக அமையும் என்று நினைப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: