உலகப் பார்வை: ஹவாயின் எரிமலை சீற்றத்தால் வெளியேறும் நச்சுப் புகை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

எரிமலை சீற்றம்: வெளியேறிய நச்சுப் புகை

ஹவாயின் கிலாவேயா எரிமலையில் ஏற்பட்ட சமீபத்திய சீற்றம் காரணமாக வெளியேறிய நச்சுப் புகையால் அவசர பணியாளர்கள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

காய்கறி பயிர்களை பெருமளவில் அழித்துவரும் `சல்ஃபர் டை ஆக்ஸைட்` புகையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த எரிமலை கடந்த இரண்டு வாரங்களாக சீற்றமாக காணப்படுகிறது. வியாழனன்று 10கிமீ உயரத்துக்கு புகை வானை எட்டியதால் சுற்றுபுறம் எங்கும் புகை மண்டலமாக மாறியது.

எரிமலையைச் சுற்றி ஏற்பட்டுள்ள பிளவுகளால் பல நூறு கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிஐஏவின் முதல் பெண் இயக்குநர்

ஜினா ஹாஸ்பல், சிஐஏவின் முதல் பெண் இயக்குநராக பெறுப்பேற்பதை அமெரிக்க செனேட் உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

54 செனேட் உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

சிஐஏவின் பழம்பெரும் நபரான ஹாஸ்பல், கடந்த காலத்தில் சிஐஏவின் கொடூரமான விசாரணை முறைகளை அவருக்குள்ள தொடர்பு குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

அமெரிக்காவுக்கு வெளியே ரகசிய சிறை ஒன்றை நடத்தினார் ஹாஸ்பல்; அதில் பயங்கரவாதிகள் நீரில் மூழ்கடிக்கும்படியான விசாரணை முறைகளை எதிர்கொள்வார்கள்; அது கொடூரமான முறை என்று பலரால் கருதப்பட்டது.

முன்னாள் இயக்குநரான மைக் போம்பேயோ அமெரிக்க வெளியுறவுச் செயலராக பதிவியேற்றதால் ஜினா ஹாஸ்பெல் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

சிறையில் பதற்றம்

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸின் முக்கிய பகுதியில் இருக்கும் ஆபத்தான சிறை ஒன்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள், கலவர தடுப்பு போலிஸார் சிறை வளாகத்தை முற்றுகையிட்டால் பெரும் கலவரம் ஏற்படும் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோக்களில், நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரா தங்களுக்கான உரிமையை மதிக்க வேண்டும் என்றும், சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் சிறைவாசிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று, அரசியல் கைதி ஒருவர் சிறையில் அடிக்கப்பட்டதையடுத்து இந்த கலவரம் தொடங்கியது.

வர்த்தக போரை தடுக்கும் நடவடிக்கை

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வளர்ந்து வரும் வர்த்தக சர்ச்சையை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக சீனா தங்களது ஆண்டு வர்த்தக கூடுதல் தொகையில் 200,000பில்லியனை கழித்து கொள்ள முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் துணை பிரதமர் கூறிய பல நடவடிக்கைகளின் ஒரு பங்காக சீனா அதிகமான அமெரிக்க பொருட்களை வாங்கலாம் என பெயர் வெளியிடாத சீன அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் விவாதம் தொடர்பான விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுடனான வர்த்தகத்தில் தங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மேலும் சீனாவுடன் வர்த்தக போர் ஏற்படலாம் என்றும் தெரிவித்து வந்தார்.

அமெரிக்கா- வட கொரியா உச்சிமாநாடு: என்ன சொல்கிறார் டிரம்ப்?

படத்தின் காப்புரிமை EPA

"லிபியா மாதிரி" வட கொரியாவில் பின்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

"லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த "லிப்யா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று கூறியது வட கொரியாவில் எச்சரிக்கையை தூண்டியது.

எனினும், அமெரிக்கா - வடகொரியா உச்சமாநாடு நடைபெறும் என்று டிரம்ப் நினைத்தார்.

ஆனால், ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்று வட கொரியா எச்சரித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்