உலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை

படத்தின் காப்புரிமை AFP

குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த தீவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஒபாமா நிர்வாகம் மீது டிரம்ப் சந்தேகம்

படத்தின் காப்புரிமை Reuters

தனது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக ஊடுருவல் நடத்தப்பட்டதா என்பது குறித்த விசாரணைக்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஒபாமாவின் நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதற்கு உத்தரவிட்டதா என்பது குறித்து தான் அறிய விரும்புவதாக ட்விட்டர் பதிவொன்றில் அவர் கூறிள்ளார்.

பாலியல் சமத்துவமின்மை - நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

படத்தின் காப்புரிமை Reuters

உலகம் முழுவதும் நிலவி வரும் பாலியல் சமத்துவமின்மைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கக்கோரி உலகத் தலைவர்களை பிரபலங்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பெண்ணும் கல்வி பெறுவதற்கும், "பெண்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள்" வழங்கவும் உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த உதவும் ஒரு உறுதியை அளிக்க வேண்டுமென்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிரபலங்கள் 140 பேர் கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

முறைகேடுகளுடன் நடந்த வாக்குப்பதிவு

படத்தின் காப்புரிமை AFP

வெனிசுவேலாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அங்கு குறைந்தளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது.

வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி கொடுக்க வேண்டும்

படத்தின் காப்புரிமை DIMITRIOS PAGOURTZIS/FACEBOOK

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் இறந்த நிலையில், ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், துப்பாக்கிதாரிகளிடம் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர்களுக்கு இந்த துப்பாக்கிகள் உதவலாம் என்றும் டெக்ஸாஸ் துணை நிலை ஆளுநர் டென் பேட்ரிக் குறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: