அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா?

கருக்கலைப்பு தடைக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அயர்லாந்து நாடு வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளது. தற்போதைய நிலையில், கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாட்டில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது.