டிரம்ப் - கிம் உச்சிமாநாடு: தென் கொரிய அதிபர் கலந்து கொள்ள வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் - கிம் இடையிலான உச்சிமாநாடு நடைபெற்றால், அதில் தென் கொரிய அதிபர் முன் ஜே- இன் கலந்து கொள்வார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா - வட கொரிய தலைவர்கள் சந்திக்கும் உச்சிமாநாட்டை திட்டமிட்டபடி நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் முன்னேற்றம் இருப்பதை பொறுத்தே முன் ஜே-இன் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா - வட கொரியா உச்சிமாநாடு ஜுன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது.
"வெளிப்படையான விரோதத்தை" வட கொரியா வெளிபடுத்துவதாகக்கூறி அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்.
சிங்கப்பூரில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றால் அமெரிக்க அதிபர் வட கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதுவே முதல்முறையாக இருக்கும்.
இருநாட்டு தலைவர்களும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும், அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பம் உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை "அரசியல் போலி" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.
எனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். வட கொரியா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பை விண்ணளவுக்கு உயர்த்தியவர் அவரே.
பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், திட்டமிட்டபடி இந்த பேச்சுவார்த்தையை நடத்த இரு தரப்பினரும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அதன்படி உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்ய, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவிற்கு அதிகாரிகள் குழு சென்றுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப் தெரிவித்தார்.
வட கொரியா - அமெரிக்கா இடையே உச்சிமாநாடு நடைபெறும் என்றால், சிங்கப்பூரில் கிம் மற்றும் டிரம்புடன் முன் கலந்து கொள்வார் என தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான யோனப் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- கோப்ரா போஸ்ட்: சதித்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா இந்திய ஊடகங்கள்?
- சிக்ஸர் - பௌண்டரி மழை; மேட்ச் வின்னரான வாட்சன் - 5 சுவாரஸ்ய தகவல்கள்
- ஸ்டெர்லைட்: வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள்
- 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்
- ஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்