மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா?

  • 29 மே 2018

சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ்.

மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

பாரீஸ் நகர் அருகேயுள்ள ஒரு கடல் பூங்காவில், டால்பின்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், டால்பின்களின் மகிழ்ச்சி நிலை குறித்தும், அவை மனிதர்களுடன் பழகுவதில் விருப்பம் காட்டுகிறதா என்பது குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

இது போன்ற ஆராய்ச்சி முதல்முறையாக நடத்தப்படுவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'ஸ்பைடர் மேனுக்கு' பிரான்ஸ் குடியுரிமை

படத்தின் காப்புரிமை Reuters

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து, பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை 'ஸ்பைடர் மேன்' போல சில நொடிகளில் மேலே ஏறி காப்பாற்றிய, மாலியிலிருந்து பிரான்சில் குடியேறிய கசாமாவுக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கசாமாவுக்கு வீரதீரத் செயலுக்கான பதக்கத்தையும் வழங்கி பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் கில்கித்-பால்டிஸ்தான் பகுதியின் தன்னாட்சி அதிகாரத்தை குறைத்து பாகிஸ்தான் அரசு மே 21 அன்று பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியை போலவே, கில்கித்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கும் தனி சட்டமன்றம் உள்ளது. பாகிஸ்தான் அரசின் புதிய உத்தரவால் அப்பிராந்தியத்தின் உள்ளூர் குழு எடுத்த முடிவுகளை இனி சட்டமன்றம் எடுக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு திங்களன்று வெளியிட்டுள்ளது.

அந்த ஆணை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அதனைப் புதுப்பிக்க ஸ்டெர்லைட் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், 1974ஆம் வருடத்தின் தண்ணீர் சட்டத்தின்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும் அதனை மூடி சீல்வைக்க உத்தரவிடுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

ரஷ்ய உளவாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அச்சம்

முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷத்தால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து தெரிய வந்தபோது தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆரம்பத்தில் இவர்கள் யார் என்பது குறித்தும், இவர்கள் தாக்கப்பட்ட விதம் குறித்தும் தெரியாது.

சாலிஸ்பர்ரி நகரில் பென்ச் ஒன்றில் பென்ச் ஒன்றில் இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.