ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக தென் கொரியாவில் போராட்டம்

  • 29 மே 2018
தென்கொரியா

தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் சார்பாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப்போராட்டத்தில் சுவோன், சியோல், பகுதிகளைச் சுற்றியுள்ள தென்கொரிய வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தின் துவக்கத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலியும், பின் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்களை கொள்ளவேண்டாம் என்ற கொரிய மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் இடம்பெற்றன. இந்தப் போராட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இறந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், மக்களுக்குத் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் அலையை அரசு நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்