டி-சர்ட்டா அல்லது சட்டையா?- இணையத்தில் விவாதத்தை கிளப்பிய ஆடை

ஆடை படத்தின் காப்புரிமை BALENCIAGA

பெலேன்சியாகா என்னும் ஃபேஷன் நிறுவனம், 2018-ம் ஆண்டுக்கான இலையுதிர் கால கலெக்‌ஷனாக, 1290 டாலருக்கு ஆண்களுக்கான டி-ஷர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை பலரை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், இதன் வடிவமைப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு டி சர்ட்டின் முன்பு, கட்டம் போட்ட சட்டை குத்தி வைத்திருப்பது போல இதன் வடிவமைப்பு உள்ளது.

இது பலருக்கு குழப்பத்தை விளைவித்துள்ளது.

இந்த ஆடையினை, இரண்டு முறைகளில் அணியலாம் என பெலேன்சியாகா வலைதளம் கூறியுள்ளது.

ஆனால், பலர் தாங்களாகவே இதுபோன்ற ஆடையை தயாரித்து, நிறைய பணத்தை சேமிக்க முடிவு செய்தனர்.

இதனை ஏன் சிறந்த ஐடியாவாக பெலேன்சியாகா கருதியது என்ற மக்களின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இந்த மர்மத்தைத் தீர்க்க, அந்நிறுவனத்திற்கு நாங்கள் தொடர்புகொண்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்