தலை வெட்டப்பட்ட பிறகும் கொத்திய பாம்பு : கடிபட்டவருக்கு தீவிர சிகிச்சை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கடித்துள்ளது.

பாம்பு

பட மூலாதாரம், Alamy

மிலோ சட்கிளிஃப் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அந்த நான்கு அடி நீளமுள்ள 'ரேட்டில்ஸ்நேக்' வகைப் பாம்பைக் கண்டதாகவும், அதன்பின் அப்பாம்பின் தலையைத் துண்டித்ததாகவும் அவரது மனைவி ஜெனிஃபர் சட்கிளிஃப் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறியுள்ளார்.

மிலோ அந்தத் துண்டிக்கப்பட்ட தலையை அப்புறப்படுத்துவதற்காக கையில் எடுத்தபோது அது அவரைக் கடித்துள்ளது. அவருக்கு 26 டோஸ் நச்சுமுறிவு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. தலை வெட்டப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னும் தம்மைத் தாக்குபவர்களைக் கடிக்கும் அனிச்சை செயல்பாடு பாம்புகளுக்கு உயிர்ப்புடன் இருக்கும்.

அவர் உடனடியாக அருகிலுள்ள கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இப்போதுதான் வெளியே தெரிந்துள்ளது.

தற்போது உயிராபத்தைக் கடந்துள்ள மிலோவுக்கு சிறுநீரக செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

பாம்புகளின் தலையை வெட்டிக் கொல்வது கொடுமையானது மட்டுமல்லாது ஆபத்தானதும் கூட என்று அரிசோனா பல்கலைக்கழக மருத்துவர் லெஸ்லீ போயர் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

ராஜநாகத்தை கையில் பிடித்த போலீஸ் அதிகாரி (காணொளி)

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :