'அமெரிக்கா வருமாறு கிம் ஜாங் உன்னை அழைப்பேன்': டிரம்ப்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும்பட்சத்தில் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது குறித்து யோசிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்னை அமெரிக்காவிற்கு அழைப்பேன்: டிரம்ப்

பட மூலாதாரம், EPA

வரும் ஜூன் 12ஆம் தேதி இருநாட்டு தலைவர்களுக்கிடையே நடக்கவுள்ள சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் பேசிய பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் "எளிதான அங்கமாக" டிரம்ப் கூறும், கொரிய போரை முறைப்படி முடித்துவைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிநிலையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தற்போது கூறியுள்ளார்.

"அதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் நடைபெறுகின்ற ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமர் அபேயின் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் நலன்களை மேலோட்டமாக மட்டுமே பார்க்க கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பூர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெறும் ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக டிரம்ப்-அபே சந்திப்பு பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP

ஜப்பானின் நலன்களை புறந்தள்ளுகின்ற வகையிலான ஒப்பந்தம் ஒன்றை வட கொரியாவோடு அதிபர் டிரம்ப் உருவாக்கலாம் என்ற கவலைகள் ஜப்பானில் நிலவுகின்றன.

அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்த விடயங்களே டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று கருதப்படும் நிலையில், கொரிய போரை முறைப்படி முடித்து வைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :