டிரம்ப் - கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் ஆகியோர் ஜூன் 12 அன்று நடத்தவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார் அதிபர் டிரம்ப்.

எனினும், இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளையே முன்வைத்துக்கொண்டிருந்த இரு தலைவர்களும் நடத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் வடகொரியாவின் அணு ஆயுதத்திட்டம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளிலும் நடக்காமல் இந்தப் பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செண்டோசா தீவில் நடக்கிறது. சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட பல காரணங்கள் உள்ளன.

சிங்கப்பூர் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுடனும் சமூகமா உறவைக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை REUTERS/CAPELLA SINGAPORE
Image caption பேச்சுவார்த்தை நடக்கவுள்ள செண்டோசா தீவில் அமைந்திருக்கும் ஆடம்பர விடுதி.

பெரும்பாலான நாடுகளில் வடகொரியாவுக்கு தூதரக உறவே இல்லை. வடகொரியா தூதரகம் அமைத்துள்ள மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

நீண்ட காலமாக சிங்கப்பூர் வழியாக வடகொரியா வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூரில் போராட்டங்களும் பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளதால், அது குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: