மேலாடை இல்லாமல் குளிக்க வாக்களித்த கேட்டலோனிய பெண்கள்

பொது நீச்சல் குளங்களில் டாப் லஸ் (மேலாடை இல்லாமல்) உடையோடு குளிக்க விருப்பம் தெரிவித்து பார்சிலோனியாவுக்கு அருகிலுள்ள கிராம பெண்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மேலாடை இல்லாமல் குளிக்க விதிக்கப்பட்ட உள்ளூர் தடை நீங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை SCREENSHOT/VOTE

ல'அமெத்தில்லா டெல் வாலீஸ் என்கிற கிராமத்தில் 61 சதவீத பெண்கள், டாப் லஸ் உடையோடு சென்று நீராட ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். 39 சதவீதம் பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கேட்டலோனிய உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 16 வயதுள்ள பெண்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவு சட்டப்படியாக கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டியது. இந்த வாக்கெடுப்பில் 379 பேர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த கோடை காலத்தில் நீச்சல் குளம் ஒன்றில் இரு பெண்கள் மேலாடை இல்லாமல் குளித்தனர். இது குறித்து நீச்சல் குளத்தின் உயிர்க் காப்புப் பணியாளர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்தப் பெண்களை பிகினி மேலாடையை அணிந்து குளிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து பெண்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராடத் தொடங்கினர். ஆண்களும் பெண்களும் மார்புக் காம்பின் படம் வரையப்பட்ட பிகினி மேலாடை அணிந்து நீச்சல் குளங்களுக்குச் சென்றனர்.

இந்தப் போராட்டத்தின்போது குளிக்க சென்ற ஆண்களும் பெண்களும் பிக்கினி மேலாடை அணிந்து மார்பு காம்புகள் வரை தண்ணீரில் மூழ்கி இருந்து போராட்டம் நடத்தினர்.

பார்சிலோனாவுக்கு வடக்காக 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவிலுள்ள இந்த கிராமத்தில் 8,000 பேர் வாழ்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்